azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Feb 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
There was an emperor who always asked the sages who visited his palace, “Who is the best among men? Which moment of time is most blessed? Which act is most beneficial?” He could not get satisfactory answers for a long time. Eventually his realm was invaded and he had to flee into the jungle. There he was captured by a tribe who selected him as an offering to their goddess. In this precarious condition, he was rescued by an ascetic who took him to his hermitage, where he and his students lovingly tended him back to health and happiness. Amidst that loving and serene environment, the king discovered the answers to his questions. The best amongst all is the one who has compassion. The most blessed time is the ‘present’ and the best act is to relieve another’s pain and grief. Do not postpone what you can do today, now, this very moment, to a future date! (Divine Discourse, 7 Sep, 1966)
ஒரு பேரரசர், தனது அரண்மனைக்கு வரும் சாதுக்களிடம், ‘’ மனிதருள் சிறந்தவர் யார்? மிகவும் ஆசீர்வதிக்கப் பட்ட தருணம் எது? மிகவும் பயனளிக்கும் செயல் எது? ‘’ என்ற கேள்விகளைக் கேட்பாராம்.பல காலமாக, அவருக்குத் திருப்தி அளிக்கக் கூடிய பதில் எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. இறுதியில், அவரது, ராஜ்யத்திற்கு எதிரிகள் படையெடுத்து வந்ததால், அவர் காட்டிற்கு ஓடி ஒளிய வேண்டி வந்தது. அங்கு அவரை காட்டு ஆதி வாசிகள் பிடித்து,காளிக்குப் பலி கொடுக்கத் தேர்ந்தெடுத்தார்கள். இப்படிப் பட்ட இக்கட்டான தருணத்தில், அவர் ஒரு சன்னியாசியால் மீட்கப் பட்டார்; அந்த சன்னியாசி அவரை தனது ஆசிரமத்திற்கு இட்டுச் சென்று, அவரும் ,அவரது சீடர்களும், அரசரை அன்புடன் பேணி, அவரது ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் மீண்டும் பெற்றுத் தந்தார்கள்.அந்த அன்பான மற்றும் அமைதியான சூழ்நிலையில், அந்த அரசர் தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டு பிடித்தார். கருணை படைத்தவனே மனிதருள் சிறந்தவன். நிகழ்காலமே மிகவும் ஆசீர்வதிக்கப் பட்ட தருணம்; பிறரது துன்பத்தையும், துயரத்தையும் நீக்குவதே மிகவும் பயனளிக்கும் செயல். இன்றே, இத்தருணத்திலேயே செய்ய வேண்டிய எதையும், மற்றொரு நாளைக்கு என ஒத்தி வைக்காதீர்கள் !