azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 26 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 26 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
In a bud there is very little fragrance. However, as it grows and blossoms, it automatically acquires very fine fragrance. Likewise, when the human consciousness expands, it will find fullness in the state of Sath-chith-ananda (Truth-Consciousness-Bliss). Starting with the ordinary mind the consciousness rises to the level of the Super-mind. Then it moves up to the state of the Higher Mind. The next higher stage is that of the Illuminated Mind. Through all these stages, the continuing entity remains the same, as in the bodily changes from infancy to old age. That is the Universal Consciousness which is present in everyone — the One in the Many. The Universal Consciousness is the Truth (Satyam). It is the Supreme Wisdom (Jnanam). It is Infinite (Anantam). Ever bearing in mind these triple characteristics of the Divine, strive to achieve the supreme goal of human life. (Divine Discourse, Feb 16, 1988)
பூ, அரும்பாக இருக்கும்போது, அதில் நறுமணம் மிகக் குறைவே. ஆனால், அது வளர்ந்து , மலர்ந்த பிறகு, அது தானாகவே அருமையான நறுமணத்தைப் பெற்று விடுகிறது. அதைப் போலவே, மனிதனது உணர்வு நிலை விசாலமாகும்போது, அது சச்சிதானந்த நிலையில் தனது பூரணத்துவத்தைப் பெறுகிறது. சாதாரண மன நிலையிலிருந்து தொடங்கி, உணர்வு நிலை, அதீதமான மன நிலைக்கு எழுகிறது.பின்னர் அது உன்னத மன நிலைக்கு உயருகிறது. அதற்கு அடுத்த நிலையே சைதன்ய மனம். குழந்தையிலிருந்து வயோதிக நிலைக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களில் உள்ளது போல, இந்த அனைத்து நிலைகளிலும், தொடர்ந்து வரும் இந்த நிலை ஒரே மாதிரியாகவே இருக்கிறது. பலவற்றில் ஒன்றாக இருக்கும் இதுவே, அனைவரிலும் உறையும் பரப்பிரம்மம் ஆகும். இந்த பரப்பிரம்மமே சத்யம். இதுவே ஞானம். இதுவே அனந்தம். தெய்வீகத்தின் இந்த மூன்று குணாதிசியங்களை எப்போதும் மனதில் கொண்டு, மனித வாழ்க்கையின் தலை சிறந்த குறிக்கோளை அடைவதற்குக் கடுமையாக பாடுபட வேண்டும்.