azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
The Universe itself is a university in which every human being is a student. Every student here pursues one subject and acquires a degree. Each one may choose a subject of one’s liking. But whatever different subjects they may study, there is one thing common to all of them, one common pursuit and goal: to obtain the degree of Divine Love. In the cosmic university, though there are scientific, political, economic and other studies, what is fundamental to all of them is the spiritual knowledge. Even in the spiritual field there are special subjects. There is one group which may be described as the five D's: Dedication, Devotion, Discipline, Discrimination and Determination. Those who have mastered the five D's are qualified to receive God's love. (Divine Discourse Jan 16, 1988)
இந்த பிரபஞ்சமே, ஒவ்வொரு மனிதனையும் மாணவனாகக் கொண்ட ஒரு பல்கலைக் கழகமாகும்.இங்கு ஒவ்வொரு மாணவனும், ஒரு குறிப்பிட்ட துறையை எடுத்துப் படித்து, அதில் ஒரு பட்டத்தை பெறுகிறான். ஒவ்வொருவரும், அவருக்குப் பிடித்தமான துறையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், வெவ்வேறு துறைகளில் அவர்கள் படித்தாலும், தெய்வீக அன்பு என்ற பட்டத்தை பெறுவதே, அவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயமும், பொதுவான முயற்சியும், இலட்சியமும் ஆகும். இந்த பிரபஞ்சமயமான பல்கலைக் கழகத்தில், விஞ்ஞானம், அரசியல், பொருளாதாரம் , பிற துறைகள் என பலவாறாக இருந்தாலும், அவை அனைத்திற்கும் ஆதாரமானது ஆன்மீக ஞானமே.ஆன்மீகத் துறையிலும், விசேஷமான சில பாடங்கள் உள்ளன. இதில் ஐந்து ‘ D”s எனக் குறிப்பிடப் படும் ஒரு குரூப் உள்ளது : அவையே Dedication, Devotion, Discipline, Discrimination and Determination ( அர்ப்பணிப்பு, பக்தி, கட்டுப்பாடு, பகுத்தறிவு, மனத்திண்மை ). இந்த ஐந்திலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் இறைவனது அன்பைப் பெறத் தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.