azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
On Sankranti the Sun-God begins his northward journey, the Uttarayana. It journeys towards the Himalayas in the north, the beautiful abode of Lord Shiva. The heart should be regarded as the abode of the Lord and the vision should be turned to experience the Divine. The human heart itself symbolises the Himalayas as the abode of purity and peace. The Sun's northward journey is a pointer to the path you must take to realise God. In addition, the Sun is a supreme example of selfless and tireless service. The world cannot survive without the Sun. Life on earth is possible only because of the Sun. Thus the Sun God teaches every being the lesson of humble devotion to duty with dedication, without any conceit. Doing one's duty is the greatest Yoga, says Lord Krishna in The Gita. (Divine Discourse Jan 15, 1992)
சங்கராந்தி அன்று சூரிய பகவான் தனது வடக்கு நோக்கிய பயணமான உத்தராயணத்தைத் தொடங்குகிறார்.அவர் பகவான் பரமசிவனது வாசஸ்தலமான எழில் மிகும் இமய மலையை நோக்கிப் பயணிக்கிறார். இதயத்தை இறைவனது இருப்பிடமாகக் கருதி, திருஷ்டியை, தெய்வீகத்தை அனுபவிக்கும் வண்ணம் திருப்ப வேண்டும். மனித இதயமே பரிசுத்தம் மற்றும் சாந்தியின் உறைவிடமான இமயமலையைக் குறிக்கிறது.சூரியனின் வடக்கு நோக்கிய பயணம், இறைவனை உணருவதற்கு நீங்கள் செல்ல வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டுவதாகும்.மேலும் சூரியன் தன்னலமற்ற மற்றும் களைப்பே இல்லாத சேவைக்கு ஒரு தலை சிறந்த உதாரணமாகும். ஆதவன் இன்றி இந்த அகிலம் இல்லை . இந்த பூமியில் உயிர்கள் வாழ்வதே சூரியனால் தான். எனவே, அகந்தை அற்ற, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பணிவான கடமை உணர்ச்சியின் பாடத்தை, சூரிய பகவான் ஒவ்வொரு ஜீவராசிக்கும் போதிக்கிறார்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், ஸ்ரீமத் பகவத் கீதையில், ஒருவர் தனது கடமையை ஆற்றுவதே மிகச் சிறந்த யோகம் என்கிறார்.