azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
The Sankranti festival should be regarded as the day on which you turn your vision towards God. Your life can be compared to a stalk of sugarcane. Like the cane, which is hard and has many knots, life is full of difficulties. Never allow yourself to be overwhelmed by difficulties. Overcome the vicissitudes of life with forbearance and enjoy the sweet bliss of the Divine. Just as sugarcane is crushed and its juice converted into jaggery to enjoy the permanent sweetness of jaggery, enduring bliss can be got only by overcoming trials and tribulations. I address devotees as Bangaru (Golden one), because I consider you as very precious. Gold cannot be made into an attractive jewel without its transformation through the process of melting in a crucible and being beaten into the required shape. Develop self-confidence. Have firm faith in God. With unshakeable faith, dedicate yourself to the service of your fellow-beings and lead exemplary lives. (Divine Discourse Jan 15, 1992)
சங்கராந்திப் பண்டிகையை, நீங்கள், உங்களது திருஷ்டியை இறைவனை நோக்கித் திருப்புகின்ற நாளாகக் கருத வேண்டும்.உங்களது வாழ்க்கையை ஒரு கரும்புத் துண்டிற்கு ஒப்பிடலாம்.கடினமாகவும் , பல கணுக்களையும் கொண்ட கரும்பைப் போல,வாழ்க்கையும் பல துன்பங்கள் நிறைந்ததே.துன்பங்கள் உங்களை மூழ்கடித்து விட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை பொறுமையோடு வென்று,இறைவனின் இனிய ஆனந்தத்தை அனுபவியுங்கள். எவ்வாறு கரும்பு பிழியப்பட்டு, அதன் சாறு, நிரந்தரமான இனிமை தரும் வெல்லமாக மாற்றப் படுகிறதோ, அவ்வாறே, சோதனைகளையும், வேதனைகளையும் வென்றால் மட்டுமே சாஸ்வதமான ஆனந்தத்தைப் பெற முடியும். நான் பக்தர்களை, பங்காரு( தங்கமே) என அழைக்கிறேன், ஏனெனில் நீங்கள் மிகவும் விலைமதிப்பற்றவர்கள் என நான் கருதுகிறேன்.உலையில் இட்டு உருக்கப் பட்டு, தேவையான ரூபத்தைக் கொண்டு வருவதற்காக, தட்டி அடிக்கப் படாமல், தங்கத்தை ஒரு கவர்ச்சியான ஆபரணமாக ஆக்க முடியாது. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.இறைவன் பால் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள்.அசைக்க முடியாத இறை நம்பிக்கையுடன், சக மனிதர்களின் சேவையில் உங்களை அர்ப்பணித்துக் கொண்டு, அப்பழுக்கற்ற வாழ்க்கையை நடத்துங்கள்.