azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 12 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 12 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
What students need today are three things: Spirit of Sacrifice, Devotion to God and Love for the Motherland. It is because people are filled with pride, selfishness and self-interest, they are ceasing to be human. For this, the first requirement is the elimination of ‘my’ and ‘mine’. The readiness to sacrifice one’s pleasure and comforts for the sake of one’s motherland must be promoted amongst one and all. When there are many noble-minded, and spiritually-oriented youth and students, nations will automatically achieve peace and security. You must develop self-reliance and self-confidence. Adhere to the basic qualities of truth, righteousness, forbearance and self-sacrifice. These are common to all people, without regard for nationality, creed or language. Cultivate a broad outlook, based on the fact that Divine is present in everyone. There is nothing that you cannot accomplish if you have firm faith in God and earn God’s Grace. (Divine Discourse, Jan 14, 1988)
மாணவர்களுக்கு இன்று தேவையானவை மூன்று விஷயங்கள் ; தியாக புத்தி, பகவத் ப்ரேமை, தேச பக்தி.மக்கள் அகந்தை, சுயநலம் மற்றும் சுய தேவை ஆகியவற்றால் நிரம்பி இருப்பதால், அவர்கள் மனிதர்களாகவே இருப்பது இல்லை.இதற்கு , முதல் தேவை, ‘’ நான்’’, ‘’ எனது’’என்ற உணர்வுகளை அழிப்பது தான்.ஒருவரது சுகம் மற்றும் சௌகரியங்களை, தனது தாய் நாட்டிற்காகத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை, அனைவரிடத்திலும், வளர்க்க வேண்டும்.சீரிய மனப்பாங்கு மற்றும் ஆன்மீக உணர்வு கொண்ட பல இளைஞர்களும், மாணவர்களும் இருக்கும் போது, தேசங்கள் தானாகவே சாந்தியையும், பாதுகாப்பையும் பெற்று விடும். நீங்கள் தற்சாற்பு மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அடிப்படைக் குணங்களான சத்தியம், தர்மம்,சகிப்புத் தன்மை மற்றும் ஆத்ம தியாகம் ஆகியவற்றைப் பற்றி ஒழுகுங்கள். தேசம், குலம் அல்லது மொழி என்ற வேறுபாடின்றி, இவைகள் அனைவருக்கும் பொதுவானவையே.இறைவன் அனைவரிடத்தும் உறைகிறான் என்ற உண்மையின் அடிப்படையில் ஒரு பரந்த மனப்பாங்கினை வளர்த்துக் கொள்ளுங்கள்.இறைவன் பால் திடமான நம்பிக்கை கொண்டு, இறை அருளைப் பெற்று விட்டால், நீங்கள் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.