azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
As the Universe is constituted by the three attributes or Gunas (Satwa, Rajasand Tamas) and is permeated by them, the first stage in spiritual practice is to put an end to the Tamo Guna, whichis characterised by foolish obstinacy (moorkatwa). When filled with inertia of this guna, the person exhibits dull intelligence and is inclined to indulge in meaningless questioning and argumentativeness. Instead, study every issue deeply and then draw conclusions. Only then your experience will be rewarding. The Tamasic person is incapable of perceiving the truth and cannot realise the Divine. Such a person will be caught in the endless cycle of birth and death. Avoid endless verbal debate over every trivial matter. Such controversies result in only provoking bitterness, instead of harmony. It will not serve you to realise the truth. (Divine Discourse, Jan 8, 1988).
பிரபஞ்சமே ஸத்வ, ரஜஸ் மற்றும் தமோ என்ற மூன்று குணங்களால் உருவாக்கப்பட்டதாகவும், அவற்றால் ஊடுருவி உள்ளதாகவும் இருப்பதால், முட்டாள்தனமான பிடிவாதத்தைக்( மூர்க்கத்வம்) குறிக்கும் தமோ குணத்தை அழிப்பதே ஆன்மீக சாதனையின் முதல் நிலையாகும். இந்த குணத்தின் சோம்பேறித்தனத்தால் நிரம்பியிருக்கும் போது, ஒருவர் மங்கிய புத்தியை வெளிப்படுத்துவதோடு, அர்த்தமற்ற கேள்வி கேட்பதிலும், விதண்டா வாதத்திலும் ஈடுபடுவதற்குத் தயாராக இருக்கிறார்.அதற்குப் பதிலாக ஒவ்வொரு விஷயத்தையும், ஆழ்ந்து ஆராய்ந்து, பின்னர் முடிவெடுங்கள். அதன் பின்னரே உங்களது அனுபவம் பயனளிப்பதாக இருக்கும். தாமஸிக குணம் படைத்த ஒருவர் சத்தியத்தை அறிந்து கொள்ள இயலாதவராக இருப்பார்; அவரால் தெய்வீகத்தை உணர முடியாது.இப்படிப் பட்ட ஒரு மனிதர் முடிவே இல்லாத பிறப்பு , இறப்பு என்ற சூழலில் சிக்கித் தவிப்பார். ஒவ்வொரு அற்ப விஷயத்தைப் பற்றிய, முடிவே இல்லாத வாக்கு வாதத்தைத் தவிர்த்து விடுங்கள். இப்படிப் பட்ட சர்ச்சைகள், இசைவுக்குப் பதிலாக மனக்கசப்பைத் தூண்டுவதிலேயே சென்று முடியும்.நீங்கள் சத்தியத்தை உணருவதற்கு அது துணை புரியாது.