azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 06 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 06 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Along with an account in this bank (Swami was inaugurating a bank branch in Puttaparthi), you must take care to have an account in God’s Bank too. This bank will not give loans to all and sundry; its help is only for those who are creditworthy, who have impressed by their industry and integrity that they will make good use of the money and keep their word. That other Bank too will save those from distress and grief who have truth, righteousness, peace and love. This bank will help only in proportion to the deposits that stand in your name; that Bank too deals like that. The consequences of the meritorious activities of previous births can be drawn upon now; but unless you have them, no cheque will be honoured. Moreover, each must have a separate account in one’s own name; one brother cannot draw on the account of another brother or the wife cannot draw on the account of the husband. (Divine Discourse, July 14, 1966)
இந்த வங்கியில் ஒரு கணக்கு வைத்துக் கொள்வதைப் போல ( பகவான் ஒரு வங்கியின் கிளையை புட்டபர்த்தியில் தொடங்கி வைத்துக் கொண்டிருந்தார்), நீங்கள் இறைவனின் வங்கியிலும் ஒரு கணக்கை வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வங்கி போகிறவர், வருகிறவருக்கெல்லாம் கடன் தராது; நம்பகமானவர்களுக்கும், கொடுக்கிற பணத்தை நல்ல வழியில் பயன்படுத்தி, தங்களது வாக்குறுதிகளை நிறைவற்றுவார்கள் என தங்களது உழைப்பு மற்றும் நாணயத்தின் மூலம் முத்திரை பதித்தவர்களுக்கும் மட்டுமே, இந்த வங்கியின் உதவி கிடைக்கும். அந்த ( இறைவனது ) வங்கியும் கூட சத்தியம், தர்மம், சாந்தி மற்றும் ப்ரேமை உள்ளவர்களை மட்டுமே,, துன்பம் மற்றும் துயரத்திலிருந்து காப்பாற்றும். இந்த வங்கி, உங்களது பெயரில் சேமித்து வைத்துள்ளதற்கு ஏற்றவாறே உதவி புரியும்; அந்த வங்கியும் அவ்வாறே தான் செயல் படும். முந்தைய பிறவிகளின் புண்ணிய செயல்களின் பலன்களை இப்போது பெற்றுக் கொள்ளலாம்;ஆனால் அவை உங்களிடம் இல்லை என்றால், எந்தக் காசோலையும் மதிக்கப் பட மாட்டாது.மேலும், ஒவ்வொருவருக்கும் அவரது பெயரிலேயே தனிப்பட்ட கணக்கு இருக்க வேண்டும்; ஒரு சகோதரர், மற்றொரு சகோதரரின் கணக்கிலிருந்தோ அல்லது மனைவி, கணவனின் கணக்கிலிருந்தோ பணத்தை ( பலன்களை) எடுக்க முடியாது.