azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

Desires for worldly objects can plunge you into endless misery. Desires are like a green pumpkin which will sink in water. A desireless person is like a dried pumpkin that floats in water; such people will be able to overcome the pulls of the mundane world and also aspire for a divine life. They may not be particular about liberation, but they will never give up devotion. God looks after the progress and well-being of such a person, here in this world and thereafter,only because they are desireless and are detached, with all their thoughts centered on God. To secure the grace of the Divine in this way is truly the best spiritual practice (yoga). To preserve such hard-won grace is the best way to ensure your well-being (kshemam). It can be got only through grace-filled human effort. Some spiritual exercises are indeed necessary for this purpose. (Divine Discourse, Jan 8, 1988)
உலகியலான பொருட்களின் மீதான ஆசைகள் உங்களை முடிவே இல்லாத துன்பத்தில் ஆழ்த்தி விடும்.ஆசைகள், தண்ணீரில் மூழ்கி விடும், ஒரு பச்சைப் பூசணிக்காயைப் போன்றவை.ஆசைகளற்ற ஒரு மனிதன், தண்ணீரில் மிதக்கக் கூடிய ஒரு காய்ந்து உலர்ந்த பூசணிக்காயைப் போன்றவன் ;இப்படிப் பட்ட மனிதர்கள் இந்த உலகின் ஈர்ப்புக்களை வென்று,ஒரு தெய்வீக வாழ்க்கையை நாடவும் முடியும்.அவர்கள் மோக்ஷம் தான் வேண்டும் என்பவர்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் பக்தியை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.அவர்கள் ஆசைகள் அற்றவர்களாகவும், பற்றின்றியும், தங்களது சிந்தனைகள் அனைத்தையும் இறைவனைக் குறித்தே வைத்திருப்பதாலேயே, இறைவன், இப்படிப் பட்ட மனிதரது முன்னேற்றம் மற்றும் நலனை, இம்மையிலும் மறுமையிலும் கவனித்துக் கொள்வான். இறை அருளை இவ்வாறு பெறுவதே, உண்மையிலேயே மிகச் சிறந்த யோகமாகும். கஷ்டப்பட்டு ஈட்டிய இப்படிப் பட்ட இறை அருளை காத்துக் கொள்வதே, உங்களது க்ஷேமத்தை உறுதிப் படுத்துவற்கான மிகச் சிறந்த வழியாகும். இறை அருள் நிரம்பிய மனித முயற்சியால் மட்டுமே இதைப் பெற முடியும். இந்தக் குறிக்கோளை அடைவதற்கு சில ஆன்மீக சாதனைகள், உண்மையிலேயே அவசியமாகின்றன.