azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')

All of you accumulate money with great care, by thousands of acts of denial; denying yourself this comfort or that convenience, saving every possible way, spending less and earning more! But a day comes when you must leave this pile and go empty handed. Instead of accumulating money and depositing it in worldly banks, open an account today with God’s Bank. It receives deposits and maintains accounts strictly and confidentially. Every little sum is accounted for – your deeds, thoughts, words, whether good, bad or indifferent. No son or daughter can sue for that wealth; no tax-gatherer can lay his hands on it. No crook can transfer it to his purse. Open a deposit account there for your prosperity here and hereafter. That deposit, growing by your spiritual efforts, will give you joy and peace. While you should develop this saving habit here, for the sake of old age and a rainy day, it is necessary you develop ‘that saving habit’ for the hereafter, so that you may be saved. (Divine Discourse, July 14, 1966)
ஆயிரக்கணக்கான செயல்களை உதறிவிட்டும்,பல விதமான சௌகரியங்களை நிராகரித்து விட்டும், கூடிய எல்லா வழியிலும் சேமித்தும், குறைவாகச் செலவழித்தும், அதிகமாக ஈட்டியும்,மிகுந்த கவனத்துடன் நீங்கள் அனைவரும் பணத்தைக் குவிக்கிறீர்கள்.ஆனால், இந்தக் குவியல் அனைத்தையும் விட்டு விட்டு, வெறுங்கையுடன் நீங்கள் செல்ல வேண்டிய ஒரு நாள் வரும் ! பணத்தைக் குவித்து, உலகியலான வங்கிகளில் முதலீடு செய்வதை விட, இறைவனது வங்கியில் ஒரு கணக்கைத் துவக்குங்கள்.அது, சேமிப்புகளைப் பெற்றுக் கொண்டு, கணக்குகளை ஒழுங்காகவும், இரகசியமாகவும் பராமரிக்கும். ஒவ்வொரு சிறிய தொகையையும் கூட- உங்களது செயல்கள், சிந்தனைகள், சொற்கள் நல்லவையோ, கெட்டவையோ அல்லது அலட்சியமானவையாகவோ இருந்தாலும் கூட- அவை கணக்கில் வைக்கப் படும். எந்த மகனோ அல்லது மகளோ அந்தச் செல்வத்திற்காக வழக்கு போட முடியாது; எந்த ஒரு வரி அதிகாரியும் அதில் கை வைக்க முடியாது. எந்த ஒரு வஞ்சகனும் அதை அவனது பணப்பைக்கு மாற்றிக் கொள்ள முடியாது. இம்மையிலும், மறுமையிலும் நீங்கள் வளமாக இருப்பதற்காக அதில் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்குங்கள். உங்களது ஆன்மீக சாதனைகளால் வளரும் அந்த சேமிப்பு , உங்களுக்கு சாந்தி, சந்தோஷங்களைத் தரும். உங்களது முதுமைக்காகவும், கஷ்ட காலங்களுக்காகவும், இம்மையில் நீங்கள் சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளும் அதே நேரத்தில், உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மறுமைக்கும் அதே மாதிரியான ஒரு சேமிப்புப் பழக்கத்தை , நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.