azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 01 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 01 Jan 2017 (As it appears in 'Prasanthi Nilayam')
Keeping God as your guide and saviour, whatever work you do, will yield sure success. God is your only true friend. Your friends may be with you only until you have wealth, but the moment you lose everything, they will desert you. God is the only friend who will always be with you, in you, beside you and will never leave you. Therefore, the only way to prosper is to develop friendship with the Lord. Being a human, make others happy. This is love. Your heart is full of love. On this New Year’s day, resolve that you will start every day with love, spend the day with love, fill the day with love, and end the day with love. Share it with at least five persons each day. Practice, experience and share Divine Love with all, with no difference in caste, creed, colour, religion or nationality. Countries and the world will prosper and everyone will be happy. (Divine Discourse, Jan 1, 1994)
இறைவனை, உங்களை வழி நடத்துபவராகவும், காப்பாற்றுபவராகவும், வைத்துக் கொண்டால்,நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அது கண்டிப்பாக வெற்றியைத் தரும்.இறைவன் ஒருவனே உங்களது உண்மையான நண்பன்.உங்களிடம் செல்வம் இருக்கும் வரை மட்டுமே உங்கள் நண்பர்கள் உங்களுடன் இருக்கக் கூடும், ஆனால், நீங்கள் அனைத்தையும் இழந்து விட்ட மறு தருணமே, அவர்கள் உங்களைக் கைவிட்டு விடுவார்கள்.இறைவன் ஒருவன் மட்டுமே உங்களுடன் எப்போதும், உங்களுள், உங்களுடன் இருக்கும் ஒரே நண்பனாவான்; அவன் ஒருபோதும் உங்களைக் கை விடுவதில்லை. எனவே, வளமையாக இருப்பதற்கு ஒரே வழி, இறைவனுடன், நட்பை வளர்த்துக் கொள்வது தான். ஒரு மனிதனாக இருப்பதால், மற்றவர்களை சந்தோஷப் படுத்துங்கள்.அதுவே அன்பாகும்.உங்கள் இதயம் அன்பால் நிரம்பியுள்ளது தான். இந்தப் புத்தாண்டு தினத்தில்,நீங்கள் ஒவ்வொரு நாளையும் அன்புடன் தொடங்கி,அன்புடன் கழித்து,அன்பால் நிரப்பி, அன்புடன் முடிப்பதாக உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.அதை ஒவ்வொரு நாளும் குறைந்தது , ஐந்து பேருடனாவது பகிர்ந்து கொள்ளுங்கள். எந்த விதமான குலம்,இனம், நிறம், மதம் அல்லது நாடு என்ற வித்தியாசம் இன்றி, தெய்வீக அன்பைக் கடைப்பிடித்து அனுபவித்து, அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நாடுகளும், உலகமும் வளமுற்று, அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள்.