azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 31 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 31 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
People make every effort to accumulate wealth. An equal effort is needed to acquire the wealth of love. Human beings today invest their assets of love in pitiful ventures. Instead they should invest all their love in the divine bank of devotion. This deposit is not only safe but will yield you increasing returns in terms of bliss. Your heart is the bank where your love for God should be deposited. Deposits elsewhere are insecure. Deposits of money may be in danger of being lost. But the deposit in your heart is immune from any kind of theft or loss. Make your deposit safe by insuring it within your heart. This love has been characterised as the form of eternal nectar (amrita-swarūpa). Nectar pleases only the palate. But Divine Love confers eternal bliss which is sweeter than nectar. Resolve to acquire this nectarous love. (Divine Discourse, Nov 23, 1996)
செல்வத்தைச் சேர்ப்பதற்கு மக்கள் ஒவ்வொரு முயற்சியையும் செய்கிறார்கள். அன்பு எனும் செல்வத்தைப் பெறுவதற்கும், அதே அளவிலான முயற்சி தேவை. மனிதர்கள் இன்று , அவர்களது அன்புச் சொத்துக்களை, பரிதாபகரமான முயற்சிகளில் முதலீடு செய்கிறார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் தங்களது அன்பு அனைத்தையும் தெய்வீக வங்கியான பக்தியில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு பத்திரமானது மட்டும் அல்ல, மேன்மேலும் ஆனந்தம் எனும் வருமானத்தை உங்களுக்கு ஈட்டித் தரும். உங்கள் இதயமே, இறைவன் பால் நீங்கள் கொள்ளும் அன்பை சேமித்து வைக்க வேண்டிய வங்கியாகும். வேறு எங்கும் செய்யும் முதலீடுகள் பாதுகாப்பானவை அல்ல. பணமாகச் செய்யப் படும் சேமிப்புகள், இழப்பு ஏற்படும் ஆபத்திற்கு உட்பட்டவை.ஆனால், உங்கள் இதயத்தில் செய்யப்படும் சேமிப்பிற்கு எந்த விதமான திருட்டோ அல்லது இழப்போ ஏற்படாது. உங்களது இதயத்திற்குள்ளேயே, முதலீடு செய்வதன் மூலம், உங்களது சேமிப்பின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த அன்பு தான் அம்ருத ஸ்வரூபமானது என்று குறிப்பிடப் படுகிறது. அம்ருதம், நாவை மட்டுமே மகிழ்விக்கும். ஆனால் தெய்வீக அன்பு, அம்ருதத்தை விடவே அதிகம் இனிமையான, நிரந்தரமான பேரானந்தத்தை அளிக்கிறது.இந்த அம்ருத மயமான அன்பை பெறுவோம் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.