azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 24 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 24 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Two thousand years ago, when narrow pride and thick ignorance defiled mankind, Jesus came as an embodiment of Love and compassion and lived amongst men, holding forth the highest ideals of life. You must pay attention to the lessons He elaborated throughout His life. 'I am the Messenger of God,' He declared first. Yes. All of you too must accept that role of messenger and live as examples of Divine Love and Charity. Jesus knew that God wills all. So, even on the cross, when He suffered agony, He bore no ill-will towards anyone and He exhorted those with Him to treat all as instruments of God’s Will. "All are one; be alike to everyone" - practise this attitude in your daily lives. As you celebrate Christmas, bring to mind the words He uttered, the advice He offered, the warning He gave, and decide to direct your daily lives along the path He laid down. His words must be imprinted on your hearts and you must resolve to practise all that He taught. (Divine Discourse 24-Dec-1980)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், குறுகிய அகந்தை மற்றும் ஆழ்ந்த அறியாமை,மனித குலத்தை மாசுபடுத்திக் கொண்டு இருந்த போது, ஏசுபிரான் அன்பு மற்றும் கருணையின் திருவுருவாக அவதரித்து, வாழ்க்கையின் மிக உயர்ந்த இலட்சியங்களை நிலை நாட்டி, மனிதரிடையே வாழ்ந்தார்.அவர் தனது வாழ்க்கை முழுவதும் விளக்கிக் காட்டிய போதனைகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். முதன் முதலில், ‘’ நான் இறைவனது தூதன் ‘’ என்று அறிவித்தார்.ஆமாம். நீங்கள் அனைவருமே இறை தூதன் என்ற பாத்திரத்தை ஏற்று, தெய்வீக அன்பு மற்றும் ஈகையின் முன்னுதாரணங்களாக வாழ வேண்டும். இறைவனே அனைத்தையும் ஸங்கல்பிக்கிறான் என்பதை ஏசுபிரான் அறிந்திருந்தார். எனவே, அவர் சிலுவையில் அறையப்பட்டபோது வேதனையை அனுபவித்தாலும் கூட, எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாது, தன்னுடன் இருந்தவர்களை, அனைவரையும் இறைவனது ஸங்கல்பத்தின் கருவிகளாகக் கருதுமாறு அறிவுறுத்தினார். ‘’ அனைவரும் ஒன்றே. ஒவ்வொருவரிடம் ஒரே மாதிரி இருங்கள் ‘’- இந்த மனப்பாங்கை உங்களது அன்றாட வாழ்க்கையில் கடைப் பிடியுங்கள். கிருஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் இந்த நேரத்தில், அவர் கூறியவற்றையும், அவர் அருளிய அறிவுரையையும்,அவர் கொடுத்த எச்சரிக்கையையும் மனதிற்குக் கொண்டு வந்து, அவர் காட்டிய பாதையில் உங்களது அன்றாட வாழ்க்கைகளை செல்லுமாறு பணிக்க முடிவு செய்து கொள்ளுங்கள். அவரது வார்த்தைகள் உங்களது இதயங்களில் பதிந்து இருக்க வேண்டும்; அவர் போதித்த அனைத்தையும் கடைப்பிடிப்போம் என நீங்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.