azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

A true human being is one who follows and practices the principle of righteousness (dharma). Burning is the nature (dharma) of fire. Coolness is the dharma of ice. Fire is no fire without burning. Ice is no ice without coolness. Similarly, the dharma of a human being lies in performing actions with the body and following the commands of the heart. Every act performed with thought, word, and deed in harmony is an act of righteousness (dharma). A righteous (dharmic) life is a divine life. We say the word dharma without knowing its true nature and majesty. Dharma is of various kinds: dharma of a householder, a celibate, a recluse, and a renunciate. But the dharma of the heart is the supreme dharma. This dharma of the heart is verily the dharma of life as well. The Ramayana enshrines in itself the very essence of the dharma of the individual, family, and society. In fact every human, who embodies the ideals of Rama, in a way, is Rama Himself. Hence, it is imperative on the part of every individual to cultivate the ideals of Rama. (Summer Showers 1996, Ch 2)
தார்மீகக் கோட்பாட்டைப் பின்பற்றி, அதன்படி நடக்கும் ஒருவரே உண்மையான மனிதராவார். எரிப்பது, நெருப்பின் தர்மமாகும். குளிர்ச்சி அளிப்பது பனிக்கட்டியின் தர்மம். எரிக்காமல் இருந்தால் அது நெருப்பே அல்ல. குளிர்ச்சியின்றி ஒரு பனிக்கட்டி இல்லை.அதைப்போலவே, இதயத்தின் கட்டளைகளைப் பின்பற்றி , உடலால் செயல் புரிவதில் தான் ஒரு மனிதனின் தர்மம் இருக்கிறது.சிந்தனை, சொல் மற்றும் செயலின் இசைவோடு செய்யப் படும் ஒவ்வொரு செயலும் தார்மீகமானதே. தார்மீகமான வாழ்க்கை, தெய்வீகமான வாழ்க்கையாகும். தர்மம் என்ற வார்த்தையை, அதன் உண்மையான இயல்பு மற்றும் மேன்மையை அறியாமல் ,நாம் கூறுகிறோம். தர்மம் – ஒரு க்ருஹஸ்தனுடைய, ஒரு பிரம்மசாரியின், ஒரு வானப்ரஸ்தனின் மற்றும் ஒரு சன்யாஸின், என பல வகையானது.ஆனால் இதயத்தின் தர்மமே தலைசிறந்தாகும். இந்த இதயத்தின் தர்மமே, வாழ்க்கையின் தர்மமும் கூட. ஸ்ரீமத் ராமாயணம் தனிமனித, குடும்ப மற்றும் சமூக தர்மங்களின் சாரத்தையே உள்ளடக்கியதாகும். உண்மையில் ஸ்ரீராமரது இலட்சியங்களின் உருவாக இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு வழியில் ஸ்ரீராமரே. எனவே,ஸ்ரீராமரின் இலட்சியங்களை வளர்த்துக் கொள்வது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமாகிறது.