azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 12 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 12 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Remember, if you pray to God with a pure heart, God will use someone to respond to your prayer. It is indeed small-mindedness to ask questions such as, “Where is God”, “How will He help me?” and so on. By raising such inappropriate questions, only our faith is weakened. That is the reason, the great sage Sri Ramakrishna Paramahamsa said, “If you want to pray to God sincerely, you must be like an innocent child.” Lord Jesus also gave the same message. He used to say: "Even if I am like a child for even a brief moment of the day, how pure can I become!" It is such innocence and purity that we must possess in our hearts. There is no use in preaching to others, if your own thoughts and conduct have not changed. Engage yourself in Sadhana to cleanse your heart and mind to fill them with pure thoughts and loving feelings. (Divine Discourse, Jan 7, 1988)
நீங்கள் ஒரு தூய இதயத்துடன் இறைவனிடம் பிரார்த்தித்தால், இறைவன் யாராவது ஒருவரை, உங்களது பிரார்த்தனைக்குச் செவி சாய்க்கப் பயன்படுத்துவார். ‘’ இறைவன் எங்கிருக்கிறான்?’’, ‘’ அவன் எவ்வாறு எனக்கு உதவுவான் ‘’ போன்ற கேள்விகளைக் கேட்பது உண்மையில் குறுகிய மனப்பாங்கே. இப்படிப் பட்ட பொருத்தமற்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம், நமது நம்பிக்கையே பலஹீனமானதாகி விடுகிறது. இந்தக் காரணத்தினால் தான், பெருமைக்குரிய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், ‘’ நீங்கள் இறைவனை உளமாறப் பிரார்த்திக்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு கள்ளம் கபடமற்ற குழந்தையைப் போல இருக்க வேண்டும்.’’ என்று கூறினார். ஏசுபிரானும் இதே மாதிரியான உபதேசத்தையே அளித்துள்ளார். அவர், ‘’ நான் மட்டும், நாளின் ஒரு சிறு தருணமாவது ஒரு குழந்தையைப் போல இருக்க முடிந்தால், நான் எவ்வளவு தூயவனாக ஆகியிருப்பேன் !’’ என்று அடிக்கடிக் கூறுவதுண்டு. இப்படிப் பட்ட கள்ளம் கபடமற்ற தன்மையையும், தூய்மையையும் நாம் நமது இதயங்களில் கொண்டிருக்க வேண்டும். உங்களது சிந்தனைகளிலும், செயல்களிலும் மாற்றம் இன்றி, நீங்கள் பிறருக்கு உபதேசம் செய்வதில் எந்தப் பயனும் இல்லை. உங்கள் இதயம் மற்றும் மனதை, தூய சிந்தனைகள் மற்றும் அன்பான உணர்வுகளால் நிரப்பி, உங்கள் இதயத்தைத் தூய்மைப் படுத்துவதற்கான ஆன்மீக சாதனைகளில் ஈடுபடுங்கள்.