azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 08 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 08 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Your life should be marked by discipline and morality, wherever you live. Lead your life in consonance with the command of your conscience. Your actions should remain the same, whether observed or unobserved, noticed or unnoticed. Though it is hard to restrain your mind, it can be diverted. When the mind steeped in the secular world is diverted toward Divinity, it gains in moral strength. The mind steeped in the worldly matters makes you a prisoner of the world, whereas a mind steeped in God liberates you. Your heart is the lock and your mind is the key. When you turn the key to the left, it locks. But if you turn it right, it unlocks. It is the turning of the key that makes the difference. Hence your mind is the cause for your liberation and bondage. What then is liberation (moksha)? It is not an air-conditioned mansion, but a state devoid of delusion (moha). (Summer Roses on Blue Mountains 1996, Ch 1)
நீங்கள் எங்கு வாழ்ந்து கொண்டு இருந்தாலும், உங்களது வாழ்க்கை கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தின் சின்னமாக இருக்க வேண்டும். உங்களது வாழ்க்கையை மனச்சாட்சியின் கட்டளைகளுக்கு ஏற்றவாறு நடத்துங்கள். நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்களோ இல்லையோ, கவனிக்கப் படுகிறீர்களோ இல்லையோ, உங்களது செயல்கள் ஒரே மாதிரியாகவே இருக்க வேண்டும். மனதைக் கட்டுப்படுத்துவது என்பது கடினமானதாக இருந்தாலும், அதை திசை திருப்பி விட முடியும். உலகியலானவற்றில் ஆழ்ந்திருக்கும் மனதை , தெய்வத்தின் பால் திருப்பி விட்டால், அது ஒழுக்க வலிமையைப் பெறுகிறது. உலகியலானவற்றில் மூழ்கி இருக்கும் மனம் உங்களைப் பந்தப் படுத்துகிறது; ஆனால், இறைவனிடம் ஆழ்ந்திருக்கும் ஒரு மனம் உங்களை அதிலிருந்து விடுவிக்கிறது. உங்களது இதயம் ஒரு பூட்டு போன்றது; உங்களது மனமே அதன் சாவியாகும்,சாவியை இடது பக்கம் திருப்பினால், பூட்டி விடுகிறது.அதை வலது பக்கம் திருப்பி விட்டால், பூட்டு திறந்து கொள்கிறது. சாவியை எப்படித் திருப்புகிறோம் என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. எனவே, உங்களது மனமே பந்தப்படுவதற்கும், விடுதலை பெறுவதற்கும் காரணம். பின்னர், விடுதலை ( மோக்ஷம் ) என்றால் என்ன? அது ஏதோ ஒரு ஏர் கண்டிஷன் செய்யப் பட்ட மாளிகை அல்ல, மாயை ( மோஹ) அற்ற நிலையே ஆகும்.