azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 02 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 02 Dec 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
A person is judged by actions. Good actions reveal a good person and bad actions reveal a wicked person. Your qualities and actions are interdependent as actions reveal your inner qualities and your inner qualities drive your actions. Strive to reform yourself by developing good qualities. Merely listening to spiritual discourses or living in sacred places or in sacred company is of no use, unless an effort is made to practice a few of the noble teachings. Qualities like forbearance (kshama), compassion, truth, love and empathy are not restricted to any nation, race or faith. These are spiritual qualities and are essential for people everywhere, at all times. Propagation of Righteousness (Dharma) does not mean spreading knowledge about something that is unknown. Knowledge of Dharma is acquired only to promote its practice and only those who practice righteousness are qualified to propagate it. By practicing in daily living alone, you learn its true nature and realise its full value. (Divine Discourse, Jan 7, 1988)
ஒரு மனிதர் ,அவரது செயல்களை வைத்தே மதிப்பிடப் படுகிறார். நற்செயல்கள் ஒரு நல்ல மனிதரை எடுத்துக் காட்டுகிறது;தீய செயல்கள், ஒரு தீய மனிதரை வெளிப்படுத்துகிறது. உங்களது குணங்களும் , செயல்களும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவையே, ஏனெனில்,உங்களது செயல்கள் உங்களது உள்ளார்ந்த குணங்களை எடுத்துக் காட்டுகின்றன; உங்களது உள்ளார்ந்த குணங்கள் உங்களது செயல்களை ஊக்குவிக்கின்றன. நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் உங்களைத் திருத்திக் கொள்ளப் பாடுபடுங்கள். சீரிய அறிவுரைகளைப் பின்பற்ற முயலாவிடில், ஆன்மீகச் சொற்பொழிவுகளை வெறுமனே கேட்பதாலோ அல்லது புனிதத் தலங்களில் வசிப்பதாலோ அல்லது புனிதமானவர்களின் நட்பு வட்டத்தில் இருப்பதாலோ மட்டும் பயனில்லை. சகிப்புத் தன்மை ( க்ஷமா),கருணை, சத்தியம்,ப்ரேமை மற்றும் அனுதாபம் ஆகிய குணங்கள், ஏதோ ஒரு நாட்டிற்கோ, குலத்திற்கோ அல்லது மதத்திற்கோ மட்டுமே சொந்தமானவை அல்ல. இவை ஆன்மீகக் குணங்கள்; மனிதர்களுக்கு எங்கும், எப்போதும் அத்தியாவசியமானவை. தர்மத்தைப் பரப்புவது என்றால், தெரியாத ஒன்றைப் பற்றிய ஞானத்தைப் பரப்புவது என்று பொருளல்ல. தர்மத்தைப் பற்றிய ஞானத்தைப் பெறுவது, அதைக் கடைப்பிடிப்பதற்கே; அதைக் கடைப் பிடிப்பவர்களே, அதைப் பரப்புவதற்கான தகுதியை உடையவர்கள். தினசரி வாழ்க்கையில் அதைக் கடைப்பிடிப்பதால் மட்டுமே, நீங்கள் அதன் உண்மையான இயல்பைத் தெரிந்து கொண்டு, அதன் மதிப்பை முழுவதுமாக உணர முடியும்.