azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Come out of the well of ego into the sea of Universal Spirit, of which you are a part. Force your mind to breathe the grander atmosphere of the Eternal, by reminding it of God and His Glory, every second, with every breath, when you repeat any one of His many names. Or engage yourself in some work, which will take you out of your narrow self into the vaster magnificence, where you dedicate the fruit of your actions (karma) to God, where you devote your time and energy to share your joy, skill or knowledge with your fellow-beings. Or keep yourself surrounded always by persons devoted to the higher life - those who will encourage you to move forward towards the goal. Through these means, attain Chitta Suddhi (purity of mind) and then the Truth will be reflected clearly therein. (Divine Discourse, 27 Mar 1966)
அஹங்காரம் எனும் கிணற்றிலிருந்து வெளிவந்து, நீங்களே அதன் ஒரு அங்கமான, ப்ரபஞ்சமயமான உணர்வு எனும் கடலுக்கு வாருங்கள். இறைவனது பல திருநாமங்களின் ஏதாவது ஒன்றை நீங்கள் ஸ்மரணை செய்யும்போது, ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு மூச்சிலும்,இறைவனையும், அவனது மஹிமையையும், நினைவு கூர்வதன் மூலம், உங்கள் மனதை , பரப்ரம்மத்தின் பிரம்மாண்டமான சூழலை அனுபவிக்கும்படிச் செய்யுங்கள். அல்லது, எது குறுகிய சுயநலத்திலிருந்து, பரந்து விரிந்த மகத்துவத்திற்கு உங்களை எடுத்துச் செல்லுமோ,எங்கே உங்களது கர்மாவின் பலன்களை நீங்கள் இறைவனுக்கு அர்ப்பணித்து, உங்களது நேரம் மற்றும் சக்தியை, உங்களது மகிழ்ச்சி, திறன் அல்லது ஞானத்தை சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பயன்படுத்த முடியுமோ, அப்படிப் பட்ட ஏதாவது ஒரு பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அல்லது, உயர்வாழ்க்கை நிலைக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, அந்த குறிக்கோளை நோக்கி முன்னேற உங்களை ஊக்குவிப்பவர்களை உங்களைச் சுற்றி எப்போதும் இருக்குமாறு செய்து கொள்ளுங்கள். இந்த முறைகளால், சித்த சுத்தியைப் பெறுங்கள்: பின்னர் சத்தியம் அதில் தெளிவாகப் பிரதிபலிக்கும்.