azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 24 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 24 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Remember, there is no special merit in so-called spiritual exercises. Every act in your daily life must be sanctified by performing it as an offering to God. A farmer tilling his field should feel that he is tilling the field of his heart. While sowing seeds, he should sow the seeds of good qualities in his heart. While watering the field, he should think he is watering the field of his heart with love. In this way, everyone must pursue the spiritual path without the aid of rosary or going to the forest. Irrespective of physical and ideological differences, the Divine principle (Atma) is common to all. You must recognise that every being in the Universe is integrally related to society like different organs in a body. Humanity itself is a limb of Nature and Nature is a limb of God. If this integral relationship is understood, where is the ground for hatred? Hence conduct yourself in an exemplary manner.(Divine Discourse, Nov 23, 1992.)
ஆன்மீக சாதனைகள் என்று அழைக்கப் படக்கூடியவற்றில் ஒரு தனிப்பட்ட விசேஷம் எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும், இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்து அவற்றைப் புனிதப் படுத்த வேண்டும். ஒரு வயலை உழுகின்ற விவசாயி, தனது இதயத்தையே உழுவதாக உணர வேண்டும். விதைகளை விதைக்கும் போது, தனது இதயத்தில் நற்குணங்கள் என்ற விதைகளை இட வேண்டும். வயலுக்கு நீர் பாய்ச்சும் போது, அவன் தனது இதயம் எனும் வயலில், அன்பு எனும் நீரைப் பாய்ச்சுவதாகக் கருத வேண்டும். இவ்வாறாக, ஒவ்வொருவரும், ஜபமாலையின் துணை இன்றியோ அல்லது காட்டிற்குச் செல்லாமலோ ஆன்மீகப் பாதையைப் பின்பற்ற வேண்டும். உடலியலான அல்லது கொள்கை ரீதியான வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஆத்மா அனைவருக்கும் பொதுவானதே. இந்த ப்ரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியும், உடலின் பல அங்கங்களைப் போல, ஒன்றுக்கொன்று சமூகத்துடன் இணைபிரியாது சம்பந்தப்பட்டவையே, என்பதை நீங்கள் உணர வேண்டும். மனித குலமே இயற்கையின் ஒரு அங்கம்; இயற்கை இறைவனின் ஒரு அங்கம். இந்த ஒருங்கிணைந்த உறவைப் புரிந்து கொண்டு விட்டால், த்வேஷத்திற்கு இடமேது? எனவே, தலை சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்.