azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 20 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 20 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
No one should consider themselves as insignificant or unimportant. Everyone, small or big, is a vital part of the whole and has an essential role in the world, like all the parts in a rocket. Any small defective part may cause the rocket to explode. Likewise in this vast Cosmos every being has a significant role to play to ensure its smooth functioning. Today, there is no unity, purity or awareness of Divinity. When there is discord between thought, word and deed, humanness is undermined. Unity must be promoted to foster humanness. We celebrate many festivals and birthdays. It is not the festivities that are important, not the dresses or the speeches. Feelings are what are important. Without purity of thought, purity of wisdom cannot be got. Seek to purify your minds. Cultivate selfless love towards all and engage yourself in social service. Service to the villagers is service to Rama (Grama Seva is Rama Seva). (Divine Discourse, 23 Nov 1992)
எவரும் தங்களை அற்பமானவர்கள் என்றோ அவசியமற்றவர்கள் என்றோ கருதக் கூடாது.ஒரு ராக்கெட்டின் எல்லா பாகங்களையும் போல, ஒவ்வொருவரும், பெரியவரோ அல்லது சின்னவரோ, முழுமையின் ஒரு இன்றியமையாத பாகமும், உலகில் ஒரு அத்தியாவசியமான அங்கமும் ஆனவர்களே.ஒரு சிறிய, பாகம் கூட,பழுதடைந்து விட்டால், ராக்கெட்டை வெடித்து விடச் செய்யக் கூடும்.அதைப் போலவே, இந்த பரந்து விரிந்த பிரபஞ்சம் சுமுகமாக செயல்படுவதை உறுதி செய்வதற்கு, ஒவ்வொரு ஜீவராசியும் ஒரு முக்கியமான பணியை ஆற்றுகின்றது. இன்று, ஒற்றுமையோ, தூய்மையோ அல்லது தெய்வீகத்தைப் பற்றிய விழிப்புணர்வோ எங்கும் இல்லை. எப்போது, சிந்தனை, சொல், மற்றும் செயல் ஆகியவற்றிற்கு இடையே இசைவு இல்லையோ, அப்போது மனிதத்துவம் வீழ்ச்சி அடைகிறது. மனிதத்துவத்தை பேணுவதற்கு, ஒற்றுமையை ஊக்குவிக்க வேண்டும். நாம் பல பண்டிகைகளையும், பிறந்த நாட்களையும் கொண்டாடுகிறோம். விழாக் கொண்டாட்டங்களோ, ஆடை அணிகலன்களோ அல்லது சொற்பொழிவுகளோ முக்கியமானவை அல்ல. உணர்வுகளே முக்கியமானவை. எண்ணத் தூய்மை இன்றி, ஞானத்தின் தூய்மையைப் பெற முடியாது. உங்களது மனங்களை பரிசுத்தமாக்க விழையுங்கள். அனைவரிடத்திலும், தன்னலமற்ற அன்பை வளர்த்துக் கொண்டு, சமுதாய சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். கிராம சேவையே, ஸ்ரீராம சேவையாகும்.