azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 19 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 19 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
(TODAY IS THE INTERNATIONAL WOMEN’S DAY )
In the present times, many men look down upon women and treat them as mere servitors. This is a big mistake. The more a man respects women, the more he will be respected. Men should not behave in an arrogant way towards women thinking themselves to be more strong and powerful. Today people are conferred various titles of repute like Padmashri, Padma Vibhushan, etc. But the titles conferred on women since ancient times are Grihalakshmi (Goddess of the house), Illalu, Dharmapatni (righteous consort), Ardhangani (one half of the man), etc. These are very high and sacred titles. How can women with such exalted titles to their credit be inferior to men? Every man should see to it that the women at their homes do not shed tears. The husband has the right to point out the mistakes of his wife, but he must not use harsh words and hurt her feelings. Never use harsh words with anyone. Talk sweetly and softly. Your family will attain peace and prosperity once you observe these principles. (Divine Discourse, August 11, 2000)
(இன்று அகில உலக மகளிர் தினம்)
இந்தக் காலத்தில் பல ஆண்கள் , பெண்களை துச்சமாக மதித்து, அவர்களை வெறும் பணியாளர்களைப் போல நடத்துகிறார்கள். இது மிகப் பெரிய தவறாகும். ஒரு ஆண், ஒரு பெண்ணை அதிகமாக மதிக்க மதிக்க, அவனும் அதிகமாக மதிக்கப் படுவான்.பெண்களை விடத் தாங்கள் பலமானவர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்கள் எனக் கருதி, ஆண்கள், அவர்களிடம் ஆணவமாக நடந்து கொள்ளக் கூடாது. இன்று பலருக்கு, பத்மவிபூஷண், பத்மஸ்ரீ போன்ற பல பட்டங்கள் அளிக்கப் படுகின்றன. ஆனால், பண்டைய காலங்களிலிருந்தே பெண்களுக்கு, க்ருஹலக்ஷ்மி, இல்லாளு, தர்மபத்னி, அர்த்தாங்கினி( ஆணில் பாதியானவள்) போன்ற பல பட்டங்கள் அளிக்கப் பட்டுள்ளன.இவை அனைத்தும் தலை சிறந்த, புனிதமான பட்டங்கள். இப்படிப் பட்ட மேன்மையான பட்டங்களைப் பெற்றுள்ள பெண்கள், எப்படி ஆண்களை விடத் தாழ்ந்தவர்களாக இருக்க முடியும்?ஒவ்வொரு மனிதனும், தங்கள் இல்லத்தில் உள்ள பெண்கள் கண் கலங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மனைவியின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் உரிமை கணவனுக்கு உண்டு; ஆனால், அவன் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி, அவளது மனதைப் புண்படுத்தக் கூடாது.கடுமையான வார்த்தைகளை எவரிடமும் பயன் படுத்தாதீர்கள். இனிமையாகவும், இதமாகவும் பேசுங்கள்.இந்தக் கோட்பாடுகளை நீங்கள் கடைப்பிடித்தால், உங்கள் குடும்பம் சாந்தி, சௌபாக்கியங்களைப் பெறும்.