azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 15 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 15 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

An insidious disease is now rampant amongst most people, namely, disbelief. It sets fire to the tiny shoots of faith and reduces life into cinders and ashes. You have no criterion to judge, yet you pretend to judge. Doubt, anger, poison, illness — all these have to be scotched before they grow. Repeat the Lord’s Name, whether you have faith or not. That will itself induce faith; that will itself create the evidence on which faith can be built. You attach importance to quantity, but the Lord considers only quality. He does not calculate how many measures of ‘sweet rice’ you offered but how many sweet words you uttered, and how much sweetness was present in your thoughts. Offer Him the fragrant leaf of devotion, the flowers of your emotions and impulses which are freed from the pests of lust, anger, etc. Give Him fruits grown in the orchard of your mind, sour or sweet, juicy or dry, bitter or sweet. (Divine Discourse, February 8, 1963)
மிகவும் தீமை விளைவிக்கும் ஒரு வியாதி இன்று பெரும்பாலான மனிதர்களிடையே நிறைந்துள்ளது, அதுவே அவநம்பிக்கை. சீர் தூக்கிப் பார்ப்பதற்கான எந்த அளவு கோலும் உங்களிடம் இல்லை, ஆனால், முடிவு எடுப்பது போன்று பாசாங்கு செய்கிறீர்கள்.சந்தேகம், கோபம், விஷம், வியாதி –இவை அனைத்தையும் அவை வளரும் முன்னரே அழித்து விட வேண்டும். உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, இறை நாமஸ்மரணை செய்யுங்கள்.அதுவே நம்பிக்கையைத் தூண்டும்; அதுவே, அதன் மீது நம்பிக்கையை உருவாக்கக் கூடிய ,அத்தாட்சியைத் தோற்றுவிக்கும். நீங்கள் அளவு அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்; ஆனால் இறைவன் தரத்தை மட்டுமே பார்க்கிறான். அவன், நீங்கள் எவ்வளவு படி சர்க்கரைப் பொங்கல் அளித்தீர்கள் என்பதை அளப்பதில்லை; நீங்கள் எவ்வளவு இனிமையான வார்த்தைகளைப் பேசினீர்கள், உங்களது எண்ணங்களில் எவ்வளவு இனிமை இருந்தது என்பதையே கணக்கிடுகிறான்.உங்களது பக்தி எனும் நறுமணமுள்ள இலையையும், காமம், க்ரோதம் போன்ற பூச்சிகள் அற்ற, உணர்வுகள் மற்றும் உந்துதல்கள் எனும் மலரையும் அவனுக்கு அர்ப்பணியுங்கள். புளிப்பானதோ அல்லது இனிமையானதோ, பழரசமானதோ அல்லது உலர்ந்ததோ, கசப்பானதோ அல்லது இனிப்பானதோ, உங்கள் மனம் எனும் தோட்டத்தில் பழுத்த பழங்களை அவனுக்கு அளியுங்கள்.