azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 12 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 12 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Today many people do not attach importance to reciting Lord’s Name. It is a great mistake. Many are facing a lot of problems because they are not doing namasmarana. In the present age (Kali) chanting the divine name alone can redeem your lives. There is no other refuge! Singing the Lord’s glory is highly sacred. There are many snakes of wicked qualities in the anthill of your heart. When you recite the divine name, all the ‘snakes’ of bad qualities will come out. Namasmarana is like nadaswaram which attracts snakes and brings them out of anthills. Let this mellifluous name (nadaswaram) be your breath of life (jeevanaswaram). Repeat God’s name incessantly in order to get rid of evil qualities. Let each and every street reverberate with the singing of divine glory. Let each and every cell of your body be filled with divine name. (Divine Discourse, April 14, 2002)
இன்று பலர் இறை நாமஸ்மரணைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இது மிகப் பெரிய தவறாகும். பலர் , இறை நாமஸ்மரணை செய்யாததால், பல பிரச்சனைகளை எதிர் கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கலி யுகத்தில், இறை நாமஸ்மரணை ஒன்றே உங்களது வாழ்க்கைகளை மீட்க வல்லது. வேறு எந்த அடைக்கலமும் இல்லை! இறைவனது மாட்சிமையைப் பாடுவது மிகவும் புனிதமானது. உங்களது இதயம் எனும் புற்றில், பலவிதமான தீய குணங்கள் எனும் பாம்புகள் உள்ளன.இறை நாமத்தை நீங்கள் ஜபிக்கும் போது,தீய குணங்களான இந்த அனைத்து பாம்புகளும் வெளி வந்து விடுகின்றன.இறை நாமஸ்மரணை என்பது, பாம்புகளை மயக்கி , அவற்றை புற்றுகளிலிருந்து வெளியே கொண்டு வரும், மகுடியைப் (நாதஸ்வரம்) போன்றது. இந்த இனிமையான நாமம் ( நாதஸ்வரம்), உங்களது வாழ்க்கையின் உயிர் மூச்சாக ( ஜீவனஸ்வரம்) இருக்கட்டும். தீய குணங்களை விட்டொழிப்பதற்கு இடைவிடாது, இறை நாமஸ்மரணை செய்யுங்கள். ஒவ்வொரு வீதியும், இறைவனது மஹிமையைப் பாடுவதால் அதிரட்டும். உங்களது உடலின் ஒவ்வொரு உயிரணுவும், இறை நாமத்தால் நிரம்பி வழியட்டும்.