azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Your home (griha) must resound to the name of Govinda; otherwise, it is just a cave (guha), where wild animals dwell. The soul needs a house, and your body itself is its house. In that house too, the Lord’s name must be heard, or else it is a mud pot (ghata), not a human being’s body. Then your homes will be immersed in the highest peace (shanti)! Obedience to the Lord’s command is the secret to your liberation. Once you decide that the orchard in your mind belongs to Him, all fruits will be sweet! Your seeking refuge for protection (saranagathi) will render all fruits acceptable to the Lord, so they cannot be bitter. And for water, what can be purer and more precious than your tears — shed not in grief, but in rapture at the chance to serve the Lord and to walk along the path that leads to Him! (Divine Discourse, February 8, 1963)
உங்களது இல்லம் ( க்ருஹம்) கோவிந்த நாமத்தால் அதிர வேண்டும். இல்லை எனில் அது கொடிய மிருகங்கள் வாழும் ஒரு குகையே. ஆத்மாவிற்கு ஒரு வீடு தேவை; உங்களது உடலே அந்த வீடு. அந்த வீட்டிலும் கூட இறை நாமம் கேட்கப் பட வேண்டும், இல்லை எனில் அது ஒரு மனித உடல் அல்ல, அதுவும் ஒரு மண் குடமே ( கடம்).பின்னர் உங்களது இல்லங்கள், சாந்தியில் ஆழ்ந்திருக்கும் ! இறைவனது ஆணைக்கு அடிபணிவதே, ஆத்ம சாக்ஷாத்காரத்திற்கான ரகசியம் ஆகும். உங்கள் மனம் எனும் தோட்டம் இறைவனுக்கே உரித்தது என நீங்கள் முடிவு செய்து விட்டால், அனைத்து பழங்களும் இனிமையானதாகவே இருக்கும். நீங்கள் சரணாகதியை நாடுவது அனைத்து பழங்களையும் இறைவனுக்கு ஏற்றதாக ஆக்கி விடும்; எனவே அவை புளிப்பானதாக இருக்க முடியாது. நீரைப் பொறுத்த வரை,துக்கத்தினால் அன்றி, இறைவனுக்கு சேவை செய்தும், அவனிடம் இட்டுச் செல்லும் பாதையில் நடப்பதற்குமான, வாய்ப்பின் காரணமாக சிந்தப்படும் ஆனந்தக் கண்ணீரை விட, பரிசுத்தமான மற்றும் விலைமதிப்பற்ற வேறு ஒன்று எப்படி இருக்க முடியும்?