azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
People today suffer intensely from the fever of the senses and try the quack remedies of recreations, pleasures, vacations, picnics, banquets, dances, etc. only to find that the fever abates but returns after an interval – it does not subside. All the varieties in taste, colour, smell of the various food delicacies, when you consider fairly and squarely, are a mere drug to cure the illness of hunger. All the drinks that people have invented are but drugs to alleviate the illness of thirst. What you term luxury (bhoga) today, is a thing that drags people into excitement and insane pursuits. A fever will go away only when the hidden virus is rendered ineffective. So too, the virus or illness of your mind will die only when the rays of wisdom (Jnana) falls upon it. Discern and always try to prefer the beneficial (hitha) to the pleasant (priya), for the pleasant might lead you down the sliding path into the bottomless pit. (Divine Discourse, Mar 16, 1966)
மனிதர்கள் இன்று புலன்களின் ஜூரத்தினால் கடுமையாக நோய் வாய்ப்பட்டு, போலி நிவாரணங்களான கேளிக்கைகள்,சுகங்கள், விடுமுறைகள், உல்லாசப் பயணங்கள், விருந்துகள், நடனங்கள் போன்றவற்றைப் பரிசோதனை செய்து பார்க்கிறார்கள்; இவற்றால் ஜூரம் குறைவதையும், ஆனால் சிறு இடைவேளைக்குப் பிறகு அது திரும்ப வருவதையும், அது தீராமல் இருப்பதையும் காண்கிறார்கள். உணவுகளின், அனைத்து வகைகள், சுவைகள், வண்ணங்கள் மற்றும் வாசனைகள் ஆகியவற்றை நேர்மையாக ஆராய்ந்து பார்த்தால், அவை யாவும் பசி என்ற நோயைத் தீர்க்கும் வெறும் மருந்துகளே என்பது புலப்படும். மனிதர்கள் கண்டு பிடித்துள்ள அனைத்து பானங்களும் , தாகம் என்ற நோயைத் தீர்ப்பவையே.இன்று சொகுசு ( போகா) என நீங்கள் குறிப்பிடுபவை எல்லாம், மனிதர்களை மனக்கிளர்ச்சிக்கும், பைத்தியக்காரத் தனமான நாட்டங்களுக்கும் இழுத்துச் செல்லும் ஒன்றே. மறைந்திருக்கும் விஷக்கிருமியை பயனற்றுப் போகச் செய்தால் தான், ஜூரம் விட்டுப் போகும். அதைப் போலவே,உங்கள் மனதில் உள்ள விஷக்கிருமி அல்லது வியாதி, ஞானத்தின் கதிர்கள் அதில் விழுந்தால் மட்டுமே அழியும். ஆராய்ந்து, இனிமையானவற்றிற்குப் (பிரியம்) பதிலாக பயனுள்ளவற்றை (ஹிதம்) தேர்ந்தெடுக்க முயலுங்கள்; ஏனெனில் இனிமையாகத் தோன்றுபவை, உங்களை அதல பாதாளத்திற்கு இட்டுச் செல்லக் கூடும்.