azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 06 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 06 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
People travel into the sky and soar to the very heights of the empty skies. They dive into the depths of the ocean; and in many other ways, people are doing incredible things. With the help of science and technology, they are discovering and inventing things which were not previously accessible to common human beings. They are making every effort to learn and understand several phenomena but are only partially succeeding in this objective. In fact, people are inventing complicated and sophisticated computers and machines, and through these are trying to conquer the universe. After acquiring all these strengths and capacities, if people do not have the wisdom to use them well for their happiness and peaceful living, all these inventions become useless. (Summer Roses on Blue Mountains, 1976, Ch 15)
மக்கள் வானத்தில் பறக்கிறார்கள்; பரந்த ஆகாயத்தின் உச்சிக்கே சென்று விடுகிறார்கள்.அவர்கள் சமுத்திரத்தில் மிக ஆழமாகப் பயணம் செய்கிறார்கள்; பல விதங்களில் மனிதர்கள் வியக்கத் தக்க விஷயங்களைச் செய்கிறார்கள். விஞ்ஞானம் மற்றும் பொறியியலின் துணையுடன், அவர்கள் பல விஷயங்களைக் கண்டறிந்து,சாதாரண மனிதர்களுக்கு முன்பு எட்டாத பல கண்டு பிடிப்புக்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் இயற்கையின் பல விந்தைகளை கற்றுப் புரிந்து கொள்ள எல்லா விதமான முயற்சிகளையும் செய்கிறார்கள். ஆனால் இந்தக் குறிக்கோளில் அவர்கள் ஒரளவு வெற்றியையே காண முடிகிறது. உண்மையில் மனிதர்கள் சிக்கலான மற்றும் அதிநவீன கம்ப்யூட்டர்கள் மற்றும் இயந்திரங்களையும் உருவாக்கி அவற்றின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தையே வெல்ல முயல்கிறார்கள். இந்த வலிமைகள் மற்றும் திறன்களை பெற்ற பிறகும், தங்களது சந்தோஷம் மற்றும் சாந்தி நிறைந்த வாழ்க்கைக்கு இவற்றைப் பயன்படுத்தும் அறிவு, மக்களுக்கு இல்லை என்றால், இந்தக் கண்டு பிடிப்புக்கள் அனைத்தும் வீணே.