azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 04 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 04 Nov 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Many are unable to understand the sacredness of the selfless love and devotion of the Gopikas and misinterpret all their actions attributing them wrong meanings. Gopikas had noble thoughts; their love and devotion to Lord Krishna was absolutely selfless. It is for this reason that even after so many centuries they remain fresh in the minds of millions in India. The Bhagavata preaches the sacredness of devotion to Lord Krishna. There is no hatred, jealousy, or anger in divine love; that is why it can give happiness to the entire world. We should accept selfless love as an essential type of devotion and promote it in our country. It must be an ideal so far as our relationship with God is concerned. Discard any unsacred thoughts or selfishness from your hearts, from this very moment, and cultivate selfless divine love and purify your heart. (Summer Roses on Blue Mountains, 1976, Ch 14)
பலர், கோபிகைகளின் தன்னலமற்ற ப்ரேமை மற்றும் பக்தியின் புனிதத்துவத்தைப் புரிந்து கொள்ள இயலாமல், அவற்றிற்குத் தவறான அர்த்தங்களைக் கற்பிக்கிறார்கள். கோபிகைகள் சீரிய சிந்தனைகள் கொண்டவர்கள்; அவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மீது கொண்ட ப்ரேமையும், பக்தியும் முற்றிலும் தன்னலமற்றவை. இதன் காரணமாகத்தான், பல நூற்றுண்டுகள் ஆன போதிலும், அவர்கள் பாரதத்தின் கோடிக் கணக்கானவர்களின் மனதில் பசுமையாக இருக்கின்றனர். ஸ்ரீமத் பாகவதம் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மீது வைக்கும் பக்தியின் புனிதத்துவத்தை உபதேசிக்கிறது. தெய்வீக ப்ரேமையில் த்வேஷமோ, பொறாமையோ அல்லது கோபமே இருப்பதில்லை; அதனால் தான் அது உலகனைத்திற்கும் ஆனந்தம் அளிக்க வல்லதாக உள்ளது.நாம் தன்னலமற்ற ப்ரேமையை, ஒரு வித இன்றியமையாத பக்தியாக ஏற்றுக் கொண்டு, அதை நம் நாட்டில் ஊக்குவிக்க வேண்டும். இறைவனுடன் நமக்குள்ள உறவைப் பொறுத்த வரை, அது ஒரு இலட்சியமாக இருக்க வேண்டும். இந்தத் தருணத்திலிருந்தே உங்கள் இதயங்களிலிருந்து புனிதமற்ற சிந்தனைகள் அல்லது சுயநலத்தை நீக்கி, தன்னலமற்ற தெய்வீக ப்ரேமையை வளர்த்துக் கொண்டு, உங்கள் இதயத்தைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள்.