azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 24 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 24 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
When the moon shines in the sky, you can see it directly. You do not require the aid of a torch, or a lamp, or any other artificial light. The reason is it is possible for us to look at the moon by the light of the moon. In the same manner, if you want to be nearer and dearer to God or understand God, who is an embodiment of love, it will be possible to do so only by means of love which is His very nature. God who is the embodiment of love, is not confined to one place or country. He is present everywhere, in every nook and corner of the world. Hence everyone, including youth must love all and regard loving all beings as loving God, as God is present in every living being. Since God is selfless, you must also practice serving selflessly. [Summer Roses on Blue Mountains, 1976, Ch. 14]
சந்திரன் ஆகாயத்தில் பிரகாசிக்கும் போது, நீங்கள் அதை நேராகப் பார்க்க முடியும்.உங்களுக்கு ஒரு டார்ச்சோ, அல்லது ஒரு விளக்கோ அல்லது எந்த ஒரு செயற்கையான வெளிச்சத்தின் உதவியோ தேவையில்லை. இதற்குக் காரணம், நாம் சந்திரனை, அதனது ஒளியைக் கொண்டே காண முடிவது தான்.அதைப் போலவே, நீங்கள், ப்ரேமையின் திருவுருமான இறைவனுக்கு அருகாமையிலும், அன்பானவராகவும் இருக்க விரும்பினாலோ அல்லது அவரைப் புரிந்து கொள்ள விரும்பினாலோ, அவருக்கே உரித்த இயல்பான ப்ரேமையின் மூலம் மட்டுமே, அவ்வாறு செய்ய முடியும்.ப்ரேமையின் திருவுருமான இறைவன் ஒரு இடத்திற்கோ அல்லது நாட்டிற்கோ மட்டும் உட்பட்டவரல்ல. அவர் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவர். எனவே, இறைவன் ஒவ்வொரு ஜீவராசிக்குள்ளும் உறைவதால், இளைஞர்கள் உட்பட ஒவ்வொருவரும், அனைவரையும் நேசிப்பதோடு, அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பது, இறைவனை நேசிப்பதற்கு ஒப்பாகும் எனக் கருதவும் வேண்டும். இறைவன் தன்னலமற்றவன் ஆதலால்,நீங்களும் தன்னலமற்ற சேவை ஆற்றுவதைக் கடைப்பிடிக்க வேண்டும்.