azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 20 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 20 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
The Avatar of the Lord is the real Guru, who is far more superior and compassionate than all Gurus. He can, by the mere expression of His will, confer the highest consummation of spiritual life. Even the meanest of the mean can acquire the highest wisdom, in a trice. Such is the power of the Guru of all Gurus. A real guru will steal your heart, not your wealth. When the fullest embodiment of God comes down as a human, you too must develop the power to attract the giver of illumination to bestow His Grace on you. You must concentrate on service to the Guru and ruminate over His teachings. You must be eager to translate His teaching into daily activity and actual practices. You must fill your heart with devotion and dedicate all your skill for the actualization of the Guru’s counsel. Such a person alone deserves the title of a pupil (sishya). [Sathya Sai Vahini, Ch. 13]
அனைத்து குருமார்களையும் விட மிக உயர்ந்தவரும், அளவற்ற கருணையும் கொண்ட, இறைவனின் அவதாரமே உண்மையான குருவாகும். அவர், தனது ஸங்கல்பத்தின் வெறும் ஒரு உரையின் மூலம், ஆன்மீக வாழ்க்கையின் மிக உயர்ந்த நிறைவை அளிக்கக் கூடியவர். கீழ்மையிலும் கீழ்மையான ஒருவர் கூட, மிக உயர்ந்த ஞானத்தை ஒரு நொடிப் பொழுதில் அடைய முடியும்.இதுவே அனைத்து குருமார்களுக்கும் குருவானவரின் சக்தியாகும்.ஒரு உண்மையான குரு உங்கள் இதயத்தைத் திருடுவாரே அன்றி, உங்களது செல்வத்தை அல்ல. எப்போது இறைவனின் பரிபூரண அவதாரம் ஒரு மனித உருவில் வருகிறதோ, நீங்களும் கூட, தனது அருளைப் பொழியும் வண்ணம் அந்த ஞான ஜோதியை , உங்கள் பால் ஈர்க்கக் கூடிய சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். அந்த குருவின் சேவையில் உங்களது மனதைக் குவித்து, அவரது போதனைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளிலும் மற்றும் உண்மையாகக் கடைப்பிடிப்பதிலும், அவரது போதனைகளைக் கொண்டு வருவதில் நீங்கள் ஆர்வமாக இருக்க வேண்டும்.உங்களது இதயத்தை பக்தியால் நிரப்பிக் கொண்டு,குருவின் அறிவுரைகளை உணர்வதில் உங்களது திறன்கள் அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். இப்படிப் பட்ட ஒருவர் மட்டுமே, சிஷ்யன் என்று அழைக்கப் படுவதற்குத் தகுதி ஆனவராவார்.