azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 19 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 19 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
I bring you the message that will confer strength, peace, hope and fulfillment. It may not be pleasing (priya), but it will surely be beneficial (hitha)! A patient has to take drugs and put himself through regimen that is beneficial; he cannot ask for only sweet medicines and comfortable regimen which pleases him. The Doctor knows what is best for the patient! Truly speaking, treat your body as a wound, that needs to be washed, bandaged and treated with medicine thrice or four-times a day. That is the real purpose of food and drink. To cure the disease of thirst, water is the drug. Food is the medicine to cure the disease of hunger. Detachment is the medicine to cure the disease of craving for pleasure. For the pure yearning for the Divine and the pursuit that is impelled by it, the necessary first step is a rigorous self-examination to remove all evil habits, tendencies and qualities from within. (Divine Discourse, Mar 16, 1966)
நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கும் செய்தி, உங்களுக்கு சக்தி, சாந்தி, நம்பிக்கை மற்றும் பூரணத்துவத்தை அளிக்கும். அது உங்களுக்குப் பிடித்தமானதாக( ப்ரிய) இல்லாமல் போகலாம், ஆனால் அது கண்டிப்பாக நன்மை பயப்பதாக( ஹிதா ) இருக்கும் ! ஒரு நோயாளி மருந்துகளை உட்கொள்வதோடு, பயனளிக்கும் பத்தியத்திற்கும் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும்; அவர் இனிப்பான மருந்து மற்றும் தனக்குப் பிடித்தமான பத்தியம் மட்டுமே வேண்டும் எனக் கேட்க முடியாது.நோயாளிக்கு எது மிகவும் நல்லது என்பதை மருத்துவரே அறிவார் !உண்மையைச் சொல்லப் போனால், கழுவி, கட்டுப்போட்டு, தினமும் மூன்று அல்லது நான்கு முறை மருந்து அளிக்க வேண்டிய ஒரு காயத்தைப் போல, உங்களது உடலைக் கருதுங்கள்.இதுவே உணவு மற்றும் குடிநீரின் உண்மையான நோக்கம். தாகம் எனும் நோயைத் தீர்ப்பதற்கு, குடிநீரே மருந்து. பசி எனும் வியாதிக்கு உணவே மருந்து. சுகத்திற்காக ஏங்கி அலைவது என்ற வியாதிக்கு பற்றின்மையே மருந்து. தெய்வீகத்தைக் குறித்த பரிசுத்தமான ஏக்கம் மற்றும் அதனால் ஊக்குவிக்கப்படும் தேடுதலுக்கு, தன்னுள் இருக்கும் அனைத்து தீய பழக்கங்கள், உந்துதல்கள் மற்றும் குணங்களை நீக்கக் கூடிய ஒரு தீவிர சுய பரிசோதனையே, முதன் முதற் படியாகும்.