azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 16 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 16 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

Look at a piece of cloth. Truly it is a bundle of threads; and if you examine it more carefully, you will say that it is just cotton. The first stage is cotton, second stage is thread, and the final stage is the cloth. What would you do if you do not like that cloth? You remove the threads one by one and the cloth disappears! In the same manner, your mind does not have any specific form. It is simply a bundle of desires. These desires themselves come from the thoughts of your mind which can be compared to the cotton. Thus in this analogy the three stages are the cotton or the thoughts, the thread or the desires, and finally the desires constitute the mind which is the cloth. So you must try to diminish these desires as far as possible. Desires are like heavy luggage in the journey of your life. Less luggage, more comfort for you! (Summer Roses on Blue Mountains, 1976, Ch 13)
ஒரு துண்டுத் துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.உண்மையில் அது ஒரு நூல் மூட்டையே; அதை நீங்கள் இன்னும் உன்னிப்பாக கவனித்தால், அது வெறும் பருத்தியே என்று கூறுவீர்கள். இதன் முதல் நிலை பருத்தி, இரண்டாவது நிலை நூல், இறுதி நிலை துணி. உங்களுக்கு அந்தத் துணி பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? நீங்கள் அதன் நூல் இழைகளை ஒவ்வொன்றாக எடுத்து விட்டீர்கள் என்றால், துணி மறைந்து விடுகிறது! அதைப் போலவே, உங்களது மனதிற்கு ஒரு குறிப்பிட்ட ரூபம் இல்லை. அது வெறும் ஆசைகளின் ஒரு மூட்டையே. பருத்தியை ஒத்த இந்த ஆசைகள் உங்கள் மனதில் எழும் எண்ணங்களிலிருந்து வந்தவையே. இவ்வாறு இந்த உவமைப் படி உள்ள மூன்று நிலைகள் என்னவென்றால், பருத்தி அல்லது எண்ணங்கள், நூல் அல்லது ஆசைகள், இறுதியில் இந்த ஆசைகளால் ஆன மனம் எனும் துணி. எனவே, நீங்கள், உங்களால் இயன்ற அளவு இந்த ஆசைகளைக் குறைக்க முயல வேண்டும். ஆசைகள் உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் மிகவும் பளுவான சுமைகள். குறைந்த சுமையே உங்களுக்கு அதிக சுகமாகும் !