azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 12 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 12 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
In moments of great distress, Pandavas were only thinking of Krishna, teaching us a lesson about the intimate connection and friendship between Pandavas and Krishna. Lord Krishna protected them as eyelids protect the eyes because of the sacred love Pandavas had for Him. He stood by them as their companion at all times, in difficult times and in good fortune, even when they were living in the forest unrecognised for a whole year. This is the meaning of true friendship. If we look at the quality of friendship in the present times, there is no evidence of true friendship. When a lake is full of water, frogs gather round; and when the lake is empty, all frogs disappear. So also, when you are prosperous and wealthy, everyone is your friend, but when your wealth disappears, no one is around. Remember, the only true friend who will continue to be with you at all times is God. (Divine Discourse, Summer Roses on Blue Mountains 1976, Ch 12)
மிகவும் கஷ்டமான தருணங்களில், பாண்டவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரையே நினைத்துக் கொண்டு இருந்தார்கள்; இது பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும், பாண்டவர்களுக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தத்தையும். நட்பையும் பற்றி நமக்கு ஒரு பாடம் புகட்டுகிறது. பாண்டவர்கள் அவர் மீது வைத்திருந்த புனிதமான ப்ரேமையின் காரணமாக, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவர்களை, கண்களை , இமைகள் காப்பது போலக் காப்பாற்றினார்.நல்ல நேரங்களிலும், கெட்ட நேரங்களிலும், அவர்கள் ஒரு முழு வருடம் காட்டில்,அஞ்ஞாத வாசம் செய்த போதும் கூட, அவர், அவர்களது தோழனாக, அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இதுவே உண்மையான நட்பின் பொருளாகும். இந்நாளில் உள்ள நட்பின் தரத்தை நாம் பார்த்தோமானால்,உண்மையான நட்பின் அடையாளம் எங்கும் இல்லை.ஏரியில் நீர் நிரம்பி இருக்கும் போது, தவளைகள் அங்கு கூட்டமாகக் காணப்படும்; ஏரி வற்றி விட்டால, அனைத்துத் தவளைகளும் மாயமாக மறைந்து விடும்.அதைப் போலவே, நீங்கள் செல்வச் செழிப்போடு இருக்கும் போது, ஒவ்வொருவரும் உங்களது நண்பரே; ஆனால் அந்த செல்வம் கரைந்து விட்டால், எவரும் இருப்பதில்லை. எல்லாக் காலங்களிலும், உங்களுடன் இருக்கும் உண்மையான நண்பன் இறைவன் ஒருவனே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.