azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 04 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 04 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Navaratri means nine nights. Darkness is associated with night. What is this darkness in a human being? It is the darkness of ignorance. The purpose of the Navaratri celebrations is to enable you to get rid of darkness. When a reference is made to Devi, it signifies the unified form of Durga, Lakshmi and Saraswathi. These three Goddesses together represent energy or Shakti. Shakti is the energy that represents Nature (Prakruti). Nature is made up of the three qualities, Satwa, Rajas and Tamas. Saraswathi represents Satwa guna (purity). Lakshmi represents Rajo Guna (energy and activity) and Durga represents Thamo Guna (dullness or inertia). As Nature is made up of these three qualities (Rajas, Tamas and Satwa), to gain control over one’s inner Nature, people worship Durga, Lakshmi and Saraswathi as they represent these three qualities. To secure the grace of Goddess Shakthi, you must have triple purity - purity of the heart, purity in speech and purity in action. (Divine Discourse, Sep 27, 1992)
நவராத்ரி என்றால் ஒன்பது இரவுகள் என்று பொருள். இருள் என்பது இரவுடன் சம்பந்தப் பட்டது.ஒரு மனிதனில் இருள் என்றால் என்ன? அதுவே அறியாமை எனும் இருளாகும்.நவராத்ரி பண்டிகையைக் கொண்டாடுவது நீங்கள் உங்களது அறியாமையைப் போக்கிக் கொள்வதற்காகவே. தேவி என்று குறிப்பிடும்போது, அது துர்க்கா, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி என்ற மூவரும் ஒன்றிணைந்த ரூபத்தைக் குறிக்கிறது. இந்த மூன்று தேவியரும் இணைந்து, சக்தியைக் குறிக்கின்றனர். சக்தி என்பது இயற்கையை (ப்ரக்ருதி) எடுத்துக் காட்டுவதாகும். இயற்கை மூன்று குணங்களால் ஆனது; ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ். சரஸ்வதி ஸத்வ குணத்தை ( தூய்மை ) எடுத்துக் காட்டுகிறாள். லக்ஷ்மி ரஜோ குணத்தையும், துர்கை தமோ குணத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள். இயற்கை இந்த மூன்று குணங்களால் ஆனதால், தனது உள்ளார்ந்த இயற்கையைக் கட்டுப் படுத்துவதற்காக, இந்த மூன்று குணங்களையும் குறிக்கும், துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதியை மனிதர்கள் வழிபடுகிறார்கள். சக்தி தேவியின் அருளைப் பெறுவதற்கு நீங்கள் மூன்று விதமான தூய்மையைப் - சிந்தனையில் தூய்மை,சொல்லில் தூய்மை, செயலில் தூய்மை -பெற்று இருக்க வேண்டும்.