azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 Oct 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Happiness and peace are not to be found in wealth, position or power. All these generate only fear and anxiety and not peace and happiness. Today even highly educated persons do not recognise this truth, but pose as devotees. Hiranyakashipu tried all possible methods to divert his son, Prahlada from being devoted to God. The child was subjected to every conceivable torture and ordeal. Unafraid, disregarding his perverse father, Prahlada held fast to the Lord, and his devotion to the Lord saved him. Prahlada declared, "He alone is a true father who leads the child to realise God." There is nothing great about being a father. No father should rejoice when a child is born. Only when people praise the virtues of his child can the father rejoice over his child’s birth. A righteous child redeems oneself and the family. Verily, they alone are good parents who bring up virtuous children. (Divine Discourse, 6 May 1992)
சந்தோஷமும், சாந்தியும், ஆஸ்தி, அந்தஸ்து ,அல்லது அதிகாரம் ஆகியவற்றில் காணப்படுவதல்ல.இவை அனைத்தும் பயத்தையும், பதட்டத்தையுமே உருவாக்கின்றனவே அன்றி, சந்தோஷத்தையும், சாந்தியையும் அல்ல. இந்நாளில் மெத்தப் படித்தவர்கள் கூட இந்த உண்மையை உணரவில்லை, ஆனால் அவர்களும் பக்தர்களைப் போல நடிக்கிறார்கள். ஹிரண்யகசிபு, தனது மகன் பிரஹலாதனை, இறைவன் மீது பக்தி செலுத்துவதிலிருந்து, திசை திருப்ப எல்லா வழிகளிலும் முயன்றான். அந்தக் குழந்தை, நினைத்துப் பார்க்கக் கூடிய எல்லா விதமான சித்திரவதை மற்றும் கஷ்டத்திற்கும் உள்ளாக்கப் பட்டது.அச்சமின்றி,தனது மூர்க்கத் தனமான தந்தையைப் பற்றிக் கவலைப் படாமல், பிரஹலாதன் இறைவனை இறுகப் பற்றிக் கொண்டான்; அவனது இறை பக்தி அவனைக் காப்பாற்றியது. பிரஹலாதன், ‘’தனது குழந்தையை இறைவனை உணருவதற்கு இட்டுச் செல்பவரே உண்மையான தந்தை ‘’ என அறிவித்தான். ஒரு தந்தையாக இருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்லை. எந்த ஒரு தந்தையும்,ஒரு குழந்தை பிறந்தவுடன், குதூகலப் படத் தேவையில்லை. எப்போது மனிதர்கள் அவனது குழந்தையின் நல்லொழுக்கங்களைப் புகழ்கிறார்களோ, அப்போது தான் ஒரு தந்தை, தனது குழந்தையின் பிறப்பைப் பற்றி குதூகலம் அடைய முடியும். ஒரு தார்மீகமான குழந்தை, தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றுகிறது. உண்மையில், நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை வளர்ப்பவர்களே, நல்ல பெற்றோர்கள்.