azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 20 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 20 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
For someone who is blinded by ego and is unable to see anything good around them, is life going to give them any sweetness at all? For the one who never does any good, is life going to be an easy cake-walk? For the one who is leading a sinful life, is any pleasure going to come their way in future? Who is God and who is the devotee? Who is the teacher and who is the disciple? Who is the writer and who is the actor? If you choose not to apply your God-gifted intelligence to understand these answers, who is at fault? In your daily living, you are so busy establishing connection with so many people. Amongst them, you think some are your friends, you consider some others as your enemies, and spend time with those you ‘like’. Remember, for everyone, your own Self is your best friend or your worst enemy. [Summer Roses on Blue Mountains 1976, Ch. 12]
அஹங்காரத்தினால் கண்கள் மறைக்கப் பட்டு, தங்களைச் சுற்றி எந்த நல்லவற்றையும் காண இயலாத ஒருவருக்கு, வாழ்க்கை எந்த விதமான இனிமையையும் தர முடியுமா? ஒரு போதும் நல்லது எதையுமே செய்யாத ஒருவருக்கு, வாழ்க்கை எளிதானதாக இருக்க முடியுமா?ஒரு பாவகரமான வாழ்க்கையை நடத்தும் ஒருவருக்கு, எதிர்காலத்தில் எந்த விதமான சந்தோஷமும் கிடைக்குமா? இறைவன் யார், பக்தன் யார்?குரு யார் , சிஷ்யன் யார்? கதாசிரியர் யார், நடிகர் யார்?இறைவன் அளித்த புத்தியை, இந்த வினாக்களுக்கு , விடை தேடுவதில் பயன்படுத்தப் போவதில்லை என்று நீங்கள் முடிவு செய்தால்,தவறு யாருடையது?உங்களது அன்றாட வாழ்க்கையில், நீங்கள் பலருடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மும்முரமாக இருக்கிறீர்கள். அவர்களில், சிலரை நீங்கள் நண்பர்கள் என்றும் , சிலரை பகைவர்கள் என்றும் கருதி, உங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் நேரத்தைக் கழிக்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும்,உங்களது ஆத்மாவே உங்களது மிகச் சிறந்த நண்பன் அல்லது மிகவும் மோசமான பகைவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.