azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 17 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 17 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Embodiments of love! Through the power of speech you can conquer kingdoms. Through speech you can also lose all your wealth. People acquire kinsmen and friends through speech and lose them too by their words. Through words again, you can even lose your life. Words are the root cause of all these circumstances. Remember, speech is your important armour whether you experience loss or gain, prosperity or adversity, pain or pleasure. You are bestowed with many gifts. Your life is extremely precious. Time is highly valuable. Your heart is very tender. Your mind is a great possession. Endowed with all these valuable things, why do you conduct yourself as a mean, ignorant and miserable being? Don’t forget your divine nature, by immersing yourself in worldly pleasures and in mundane desires. Don’t harden your heart, which is soft and compassionate by nature, into a stone. Humanness should spontaneously manifest itself from within your heart and overflow with compassion. [Divine Discourse, March 31,1996]
தெய்வீக அன்பின் திருவுருவங்களே ! பேச்சுத் திறனின் மூலம் நீங்கள் சாம்ராஜ்யங்களையே வென்றிடலாம். பேச்சின் மூலம், நீங்கள் உங்கள் செல்வம் அனைத்தையும் இழக்கக் கூட முடியும். மனிதர்கள் உறவினர்களையும், உற்ற நண்பர்களையும் பேச்சுத் திறன் மூலம் பெறவும் முடியும்; தங்களது வார்த்தைகளின் மூலம் ,அவர்களை இழக்கவும் முடியும்.வார்த்தைகளின் மூலம், ஏன், நீங்கள் உங்கள், உயிரைக் கூட இழக்க முடியும்.வார்த்தைகளே, இந்த எல்லா சந்தர்ப்பங்களுக்கும் மூல காரணம். நீங்கள் அனுபவிப்பது நஷ்டமோ அல்லது லாபமோ;வளமோ அல்லது வறுமையோ; துன்பமோ அல்லது இன்பமோ, உங்களது பேச்சே, உங்களது முக்கியமான கவசம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பலவிதமான திறன்களைப் பெற்றுள்ளீர்கள். உங்களது வாழ்க்கை மிகவும் விலை மதிக்க முடியாதது. காலம் மிகவும் விலை மதிப்புள்ளது. உங்களது இதயம் மிகவும் மிருதுவானது. உங்களது மனமும் ஒரு தலை சிறந்த சொத்தாகும்.இந்த அனைத்து மதிப்புள்ள விஷயங்களைப் பெற்றிருந்த போதிலும்,ஏன் நீங்கள் இவ்வளவு ஒரு கீழ்த்தரமான,அறிவற்ற, பரிதாபமான ஜீவராசியாக நடந்து கொள்கிறீர்கள் ? உலகியலான இன்பங்களிலும், சாதாரணமான ஆசைகளிலும், உங்களையே நீங்கள் ஆழ்த்திக் கொண்டு, உங்களது தெய்வீக இயல்பை மறந்து விடாதீர்கள்.இயற்கையிலேயே மிருதுவாகவும், கனிவாகவும் உள்ள உங்களது இதயத்தை, ஒரு கல்லைப் போல கடினமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்களது இதயத்திலிருந்து மனிதத்தன்மை சகஜமாக வெளிப்பட்டு, கருணையால் நிரம்பி வழிய வேண்டும்.