azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
A plantain tree has a number of uses: the plantain leaf is used to serve a meal, its flower in cooking, and the trunk is helpful for binding and packing things as a good string-yielding substance, but its main use is in the bunch of bananas! You take all the trouble of planting and growing the tree for the sake of bananas, not its leaves, strings, the inner soft core, or the flower. So too, the main use of this human body is the realisation of the Divine, the rest is all incidental. You may say, ‘Oh the hands have so much to do!’ Though you may use it for all purposes, its chief purpose is to pray, to worship God, to hold His Feet. Ears are designed to hear God’s glory, and the eyes to witness His manifestations! The tongue is often misused to talk scandal, or flatter! Use it as God willed it, to sing hymns of Divine Glory. [Divine Discourse, Feb 21, 1971]
ஒரு வாழை மரம் பலவிதங்களில் பயனளிக்கிறது; வாழை இலை உணவு பரிமாற, அதன் பூ சமையல் செய்ய, அதன் பட்டை. அதிக நார் உள்ள பொருளாக இருப்பதால் கட்டுவதற்கு, என உதவுகின்றன; ஆனால் அதன் பிரதான பயன் வாழைப் பழத்தார்களாக பயன்படுவது தான் ! நீங்கள் அந்த மரத்தை நட்டு வளர்க்க முழுவதும் பாடுபடுவதெல்லாம் வாழைப் பழங்களுக்காகவே அன்றி, அதன் இலை, கயிறு, தண்டு அல்லது பூக்களுக்காக அல்லவே. அதைப் போலவே, இந்த மனித உடலின் பிரதான பயன் தெய்வீகத்தை உணருவது தான்; மற்றவை அனைத்தும் தற்செயலானவையே. நீங்கள், ‘’ ஓ! இந்த கைகளுக்கு எவ்வளவோ வேலை இருக்கிறது ‘’ என்று கூறலாம். நீங்கள் அவற்றை எல்லா விஷயங்களுக்கும் பயன்படுத்தினாலும், அதனது பிரதான நோக்கம் பிரார்த்திப்பதும், இறைவனை வழிபடுவதும், அவன் திருப்பாதங்களை இறுகப் பற்றிக் கொள்வதும் தான்.காதுகள் அவனது மாட்சிமையைக் கேட்பதற்காகவும், கண்கள் அவனது திருவுருங்களைக் காண்பதற்காகவுமே வடிவமைக்கப் பட்டுள்ளன! நாக்கு பெரும்பாலும் வம்பு பேசுவதற்கோ அல்லது முகஸ்துதி செய்வதற்கோ தான் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது.அதை இறைவன் ஸங்கல்பித்தபடி, இறைவனது மாட்சிமையைக் குறிக்கும் ஸ்லோகங்களைப் பாடுவதற்குப் பயன்படுத்துங்கள்.