azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 14 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 14 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
So long as one has a form, it is quite natural that they think of that form; but since that form has to be forgotten some day or the other, it is good to concentrate on the formless supreme and give up attachment to a form. Vedanta teaches us the philosophy of detachment (vairagya) to help in this process of concentrating on the formless supreme power which is behind every form. It is inevitable that the soul (jiva) leaves the body. This body is like a water bubble on the surface of water. This water bubble is born out of water, lives on water, and survives on water, and finally it gets dissolved in water. To think that one is full of weakness is not correct. The correct attitude is to regard God as formless, without attributes. We should take it that God is present in us. That should be the right attitude. (Divine Discourse, Summer Roses on Blue Mountains 1976, Ch 11)
ஒருவருக்கு ரூபம் இருக்கும் வரை, அவர்கள் அந்த ரூபத்தை நினைப்பது இயற்கையே; ஆனால், என்றேனும் ஒரு நாள் அந்த ரூபத்தை மறந்தே ஆக வேண்டும் என்பதால், அரூபமான பரப்ரம்மத்தின் மீது மனதைக் குவித்து, ஒரு ரூபத்தின் மீது உள்ள பற்றை விட்டு விடுவது நல்லது. வேதாந்தம், எல்லா ரூபத்திற்கும் அப்பாற்பட்ட, அரூபமான பரப்பரம்மத்தின் மீது மனதைக் குவிப்பதற்கு உதவும் வைராக்ய தத்துவத்தை, நமக்கு கற்பிக்கிறது. ஆத்மா உடலை விட்டுப் பிரிவது தவிர்க்க முடியாததே.இந்த உடல், நீர்ப்பரப்பில் இருக்கும் நீர்க்குமிழி போன்றது. இந்த நீர்க்குமிழ், நீரிலிருந்தே தோன்றுகிறது, நீரிலேயே வசிக்கிறது,நீரிலேயே பிழைக்கிறது,இறுதியில் நீருடனேயே கலந்து விடுகிறது. ஒருவர் முழுவதும் பலஹூனமானவர் எனக் கருதுவது தவறே. இறைவனை , நிர்குண, நிராகாரனாகக் கருதுவதே சரியான மனப்பாங்காகும். இறைவன் நம்முள் உறைகிறான் என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே சரியான அணுகுமுறையாகும்.