azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Every day is a sacred day when you chant the name of God, yearn for His proximity and experience the bliss of His grace within you. The supreme quality of Emperor Bali is his spirit of surrender and sacrifice. Emperor Bali surrendered himself totally to the divine. Under his reign, all the subjects were happy and led godly lives. Saddened by the thought of having to go away from his people, he told them, "Dear people! I cannot be without you and you cannot be without me. Every year I shall appear before you and give you joy." Onam is the day on which Bali fulfills his promise. People wake up early in the morning, take a bath, wear new dresses and worship God, and partake a feast to mark the Onam celebration. What is the significance of wearing new clothes (Vasthra)? Vasthra also means ‘heart’. Wearing new clothes (Vasthra) signifies purifying the heart. God dwells in a pure heart. (Divine Discourse, Sep 5, 1995)
இறை நாமஸ்மரணை செய்து கொண்டும்,அவனது அருகாமைக்காக ஏங்கியும், அவனது அருளானந்தத்தை உங்களுள் அனுபவித்துக் கொண்டும், நீங்கள் இருந்தீர்களானால், ஒவ்வொரு நாளும் புனித நாளே. அவரது, சரணாகதி மற்றும் தியாக உணர்வே,மஹாபலிச் சக்ரவர்த்தியின் தலைசிறந்த குணமாகும். மஹாபலிச் சக்ரவர்த்தி இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்.அவரது ஆட்சியில் குடிமக்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்ததோடு, தெய்வீகமான வாழ்க்கையையும் நடத்தினார்கள். தனது மக்களிடமிருந்து பிரிய வேண்டுமே என்ற எண்ணத்தால் துக்கமடைந்த அவர், ‘’ எனதருமை குடிமக்களே ! என்னால் உங்களைப் பிரிந்து இருக்க முடியாது; உங்களால் என்னைப் பிரிந்து இருக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் நான் உங்கள் முன் தோன்றி உங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பேன் ‘’ என்று கூறினார். மஹாபலிச் சக்ரவர்த்தி தனது வாக்குறுதியை நிறைவேற்றும் நாளே ஓணம். மக்கள் அதிகாலையிலேயே எழுந்திருந்து, நீராடி, புது வஸ்திரங்களை அணிந்து கொண்டு, விருந்து உண்டு ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். புது வஸ்திரங்களை அணிந்து கொள்வதன் உட்பொருள் என்ன? வஸ்திர என்றால் ” ஹ்ருதயம்’’ என்ற பொருளும் உண்டு. புது வஸ்திரங்களை அணிந்து கொள்வது என்பது, ஹ்ருதயத்தை பரிசுத்தப் படுத்துவதைக் குறிக்கிறது, பரிசுத்தமான ஹ்ருதயத்திலேயே இறைவன் உறைகிறான்.