azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 08 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 08 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
If we take a ball and pitch it on a hard ground, it will rebound to the extent determined by how hard we hit the ball on the ground. If we pitch this ball on a soft muddy ground instead of a hard surface, it will not rebound, but will get trapped and stuck in the mud. Similarly, if the pure aspect of Divinity hits a sacred heart, it rebounds. On the other hand, if we have a muddy and impure heart, even when Divinity impinges on this heart it gets stuck and entangled. Therefore, purity of one’s mind and an exemplary life are essential. Truth and honesty are to be regarded as our two eyes. Instead, if these eyes are inflicted with the disease of selfishness, then we cannot have a pure and clean heart. Young people should have purity of mind. They should take great care to protect truth and honesty. (Summer Roses on Blue Mountains 1976, Ch 11)
நாம் ஒரு பந்தை எடுத்து, கெட்டியான ஒரு தரையில் அடித்தால்,நாம் எவ்வளவு பலமாக அதைத் தரையில் அடிக்கிறோம் என்பதைப் பொறுத்து, அது திரும்பக் குதித்து வரும். இந்தப் பந்தை, கெட்டியான தரையில் இல்லாமல், ஒரு மிருதுவான சேற்றுத் தரையில் அடித்தால், அது திரும்ப வராமல், சேற்றில் மாட்டிக் கொள்ளும்.அதைப் போலவே, தெய்வீகத்தின் தூய அம்சம், ஒரு புனிதமான இதயத்தைத் தொடும்போது, அது திரும்ப வருகிறது.அதே சமயம், நமக்கு ஒரு குழம்பிய, அசுத்தமான இதயம் இருக்குமானால், தெய்வீகமே இந்த இதயத்தைத் தொட்டால் கூட, அதுவும் சிக்கி பின்னிக் கொள்ளும். எனவே, ஒருவரது மனத்தூய்மையும், பிறருக்கு முன்னுதாரணமான ஒரு வாழ்க்கையும் அத்தியாவசியமானவையாகும். சத்தியத்தையும் , நாணயத்தையும், நமது இரு கண்களைப் போலக் கருத வேண்டும். அதற்கு பதிலாக இந்த இரண்டு கண்களும் சுயநலம் என்ற வியாதியால் பாதிக்கப் பட்டு இருக்குமானால், பின்னர் நமக்கு தூய்மையான மற்றும் பரிசுத்தமான இதயம் இருக்க முடியாது. இளைஞர்களுக்கு தூய்மையான மனம் இருக்க வேண்டும். அவர்கள் சத்தியத்தையும், நாணயத்தையும், பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.