azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 05 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 05 Sep 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Today is the sacred festival of Ganesh Chaturthi. Ga symbolises intellect (buddhi), Na stands for wisdom (vijnana). So Ganapati is the master of buddhi and vijnana. He will bless you with good intellect and confer wisdom. Vinayaka is also called ‘Vighneshwara’ (remover of obstacles). No obstacle can come in the way of one who prays to Vinayaka. Worship of Vinayaka confers success in spiritual as well as worldly endeavours. Ganapati is also called ‘Mooshika Vahana’ (the one who has a mouse as His vehicle). You may wonder how a small mouse can carry on its back a hefty personality like Vinayaka. Here mooshika does not mean a mere mouse. It symbolises the darkness of ignorance because it is in darkness that the mouse moves about. Hence the name ‘Mooshika Vahana’ refers to the one who subdues ignorance and dispels darkness. Invest time to understand the inner significance of the Ganapati principle and worship Vinayaka on this auspicious day and receive His blessings. (Divine Discourse, Sep 10, 2002)
இன்று புனிதமான கணேச சதுர்த்திப் பண்டிகை. ‘’க’’ என்பது புத்தியைக் குறிக்கிறது, ‘’ந’ என்பது ஞானத்தைக் குறிக்கிறது. எனவே, கணபதி, புத்திக்கும் ஞானத்திற்கும் அதிபதியாவார்.அவர் உங்களுக்கு நல்ல புத்தி அளித்து, ஞானத்தை அருளிடுவார்.வினாயகரை ‘’ விக்னேஸ்வரர் ‘’ ( விக்னங்களை நீக்குபவர்) என்றும் அழைப்பார்கள். வினாயகரை வழிபடுபவருக்கு எந்த விதத் தடைகளும் வராது. வினாயகரை வழிபடுவது, ஆன்மீக மற்றும் உலகியலான முயற்சிகளில் வெற்றியை அளிக்கும். கணபதி ‘’ மூஷிக வாஹன”( மூஞ்சூரை வாஹனமாகக் கொண்டவர் ) என்றும் அழைக்கப் படுகிறார். பருமனான உருவம் கொண்ட விநாயகரை, ஒரு சிறிய மூஞ்சூரு தனது முதுகில் எவ்வாறு ஏற்றிச் செல்ல முடியும் என நீங்கள் ஆச்சரியப் படக் கூடும். இங்கு ‘’ மூஷிக’’ என்றால் வெறும் ஒரு மூஞ்சூரு என்று பொருளல்ல. அது அறியாமை என்னும் இருளைக் குறிக்கிறது; ஏனெனில் மூஞ்சூரு இருட்டிலேயே நடமாடும். எனவே, ‘’ மூஷிக வாஹன’’ என்ற பெயர், அக்ஞானத்தை அடக்கி, இருளைப் போக்குபவர் என்பதைக் குறிக்கிறது. கணபதி தத்துவத்தின் உட்பொருளைப் புரிந்து கொள்வதில் நேரத்தை செலவிட்டு,இந்த மங்களகரமான நாளில் அவரை வழிபட்டு, அவரது அருளைப் பெறுங்கள்.