azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 31 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 31 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')

It is not enough if you claim to be a devotee of the Lord. The Lord must recognise you as a devotee. Only then does one's devotion acquire value. Bhagavatam and other scriptures demonstrate how this kind of dedicated life can be led by any person who wishes to be devoted to the Lord. No one should feel that it is beyond his or her capacity to surrender themselves completely to the Lord. If there is firm determination, this can be accomplished. It is only through earnest endeavour that Divine wisdom can be got (Shraddhavan Labhate Jnanam). Today the world is afflicted with the epidemic of egoism (Ahamkara). There is really no basis for this kind of self-conceit. It is born of ignorance. It has to be totally eradicated. If everyone realises that the body has been given for the pursuit of righteousness and acts on that basis, they will most certainly realise the Divine. (Divine Discourse, Feb 21, 1992)
உங்களை இறைவனின் ஒரு பக்தன் என்று, நீங்கள் மட்டும் கூறிக் கொண்டால் போதாது. இறைவன் உங்களை ஒரு பக்தனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகே ஒருவரது பக்தி, எந்த மதிப்பும் பெறுகிறது. இறைவனது பக்தனாக இருக்க விரும்பும் எந்த ஒருவரும் , எவ்வாறு இப்படிப் பட்ட அர்ப்பணிப்பு வாழ்க்கையை நடத்த முடியும் என்பதை, ஸ்ரீமத் பாகவதமும், மற்ற சாஸ்திரங்களும், எடுத்துக் காட்டுகின்றன.எந்த ஒருவரும், இறைவனிடம் தங்களை பரிபூரண சரணாகதி அடையச் செய்து கொள்வது என்பது, தங்களது சக்திக்கு அப்பாற்பட்டது எனக் கருதக் கூடாது. உறுதியான மனப்பாங்கு இருந்தால், இதை அடைய முடியும். சிரத்தையான உழைப்பின் மூலமே தெய்வீக ஞானத்தைப் பெற முடியும் ( ஸ்ரத்தாவான் லபதே ஞானம்) .இந்நாளில், இந்த உலகம் அஹங்காரம் என்ற தொற்று நோயால் பீடிக்கப் பட்டுள்ளது. இப்படிப் பட்ட அகந்தைக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. இது அறியாமையால் தோன்றியுள்ளது. இதை முழுமையாக நீக்கிட வேண்டும். ஒவ்வொருவரும், இந்த உடல், தர்மத்தைத் தேடுவதற்காகவே கொடுக்கப் பட்டுள்ளது என்பதை உணர்ந்து, அதன்படி செயலாற்றினால், அவர்கள் கண்டிப்பாக இறைவனை உணர்வார்கள்.