azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 28 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 28 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
People today are totally immersed in worldly concerns and do not devote any attention to the spiritual quest. It is true, involvement in worldly affairs cannot be given up totally. But all such actions can be sanctified by performing them in a spirit of dedication to the Divine. To proceed from the human condition to the Divine in man, the only practical way is the Principle of Love (Prema Tattva). From the Mahabharata take the example of the fate of Karna and the destiny of Arjuna which indicates the difference between one who does not have Divine grace and another who has the benefit of Divine grace. While Karna, who was associated with the wicked Kauravas, met with a tragic end, despite his many talents; Arjuna who was a firm devotee of the Lord, was blessed with victory. Many scriptures aptly demonstrate the power of the Lord's grace to transform the human to the state of the Divine. (Divine Discourse, Aug 21, 1992)
இந்நாளில், மக்கள் உலகியலானவற்றில் மூழ்கி, ஆன்மீகத் தேடலில் எந்தக் கவனமும் செலுத்துவதில்லை.உலகியலான விஷயங்களில் ஈடுபடுவதை முழுமையாக விட்டு விட முடியாது என்பது உண்மையே. ஆனால், இப்படிப் பட்ட அனைத்து செயல்களையும், ஒரு இறை அற்பணிப்பு உணர்வுடன் செய்வதன் மூலம் புனிதமாக்கலாம். மனித நிலையிலிருந்து, மனிதனிள் உள்ள தெய்வீகத்திற்குச் செல்வதற்கு, ப்ரேம தத்துவம் மட்டுமே, ஒரு நடைமுறைக்கேற்ற வழியாகும். இறை அருளைப் பெறாத ஒருவருக்கும், இறை அருளைப் பெற்ற ஒருவருக்கும் உள்ள வித்தியாசத்திற்கு, மஹாபாரதத்தில் இருந்து கர்ணன் மற்றும் அர்ஜூனனது உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். கொடியவர்களான கௌரவர்களோடு சம்பந்தப்பட்டிருந்த கர்ணன், பலவித திறமைகளைக் கொண்டிருந்தாலும், சோகமான முடிவை அடைந்தான்; இறைவனது உறுதியான ஒரு பக்தனாக இருந்ததால், அர்ஜூனன் வெற்றி வாகை சூடினான். மனிதனை, மாதவனாக மாற்றுவதில், இறை அருளுக்கு உள்ள சக்தியை பல புராணங்கள், வேண்டிய அளவு எடுத்துக் காட்டுகின்றன.