azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 15 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 15 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Embodiments of Love! If our nation were to make progress, there should be complete unity amongst all its people. Our great leaders made great sacrifices and secured freedom for us. While we have attained Independence, unity has not been achieved. What is the use of freedom without unity? There is hatred everywhere. If this kind of disunity persists, how can hard-won freedom be safeguarded? People are not treading the right path. You must adopt the path of complete unity, so that every citizen (Bharatiya) must be able to say proudly, “This is my beloved country; this is my mother tongue and my religion.” You should also uphold the reputation and traditions of your family. There are many who chant the sweet name of Lord Rama, but is there anyone who actually practices the virtues Lord Rama represented? Lord Rama said, “Mother and motherland are greater than even paradise” (Janani Janma Bhumishcha Swargadapi Gariyasi). You must recognise and live by this truth. (Divine Discourse, Nov 23, 2000)
அன்பின் திருவுருவங்களே! நமது தேசம் முன்னேற வேண்டும் என்றால்,மக்கள் அனைவரிடமும் ஒற்றுமை இருக்க வேண்டும்.நமது தலை சிறந்த தலைவர்கள் மிகப் பெரிய தியாகங்கள் செய்து, நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துள்ளார்கள். நாம் சுதந்திரம் பெற்று விட்டோமே தவிர, ஒற்றுமையைப் அடையவில்லை. ஒற்றுமை இன்றி, சுதந்திரத்தினால் என்ன பயன்?எங்கு பார்த்தாலும் த்வேஷமே.இப்படிப் பட்ட ஒற்றுமையின்மை இருந்து கொண்டே இருக்குமானால், கஷ்டப் பட்டுப் பெற்ற சுதந்திரத்தை எப்படிப் பேணிக் காப்பது? மக்கள் சரியான பாதையில் நடப்பதில்லை. ஒவ்வொரு பாரதக் குடிமகனும், ‘’ இது எனது ப்ரியமான தேசம்.இது எனது தாய் மொழி, இது எனது மதம் ‘’ எனப் பெருமிதத்துடன் கூறிக் கொள்ளத் தக்க அளவிற்கு, நீங்கள் பரிபூரண ஒற்றுமையின் பாதையில் செல்ல வேண்டும். நீங்கள் உங்களது குடும்பத்தின் பெருமை மற்றும் பாரம்பரியங்களையும் கூட நிலைநாட்ட வேண்டும். பகவான் ஸ்ரீராமரின் இனிமையான நாமத்தை ஜபிப்பவர் பலர் இருக்கிறார்கள்; ஆனால் ஸ்ரீராமர் எடுத்துக் காட்டிய நற்குணங்களை, உண்மையிலேயே கடைப் பிடிப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா? பகவான் ஸ்ரீராமர், ‘’ தாயும், தாய்நாடும், சொர்க்கத்தைவிட மேன்மையானவை (ஜனனி ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரிஷ்யஸி)’’ என்று கூறினார். இந்த உண்மையை, நீங்கள் உணர்ந்து அதன்படி வாழ வேண்டும்.