azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 14 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 14 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Neither sorrow nor pleasure can ever be permanent for anyone. All that we do, good or bad, knowingly or unknowingly, will produce results. So it is necessary for us to do good so that the consequences will also be good. When a child is born out of a mother’s womb, the infant does not come out with a garland or a gold chain. However the child does come out with its invisible chain of ‘Karma’ – the result of all the actions (karma) that one has done in their previous births. But that ornament is invisible. To help us live this life well and in order to not have a chain of bad reactions around our neck when we are born in our next life, it is necessary for us to recognise, as a primary lesson, that we should do good deeds in our daily lives. Hence practice, ‘Do good, Be good, and See good.’ That alone will take you to God! (Divine Discourse, Summer Roses on Blue Mountains, 1976, Ch 8)
துன்பமோ, இன்பமோ எவருக்கும் நிரந்தரமாக இருப்பதில்லை. நல்லவையோ அல்லது கெட்டவையோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, நாம் செய்யும் அனைத்தும் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, விளைவுகளும் நல்லவையாக இருப்பதற்கு, நாம் நல்லவற்றையே செய்வது அவசியமாகிறது. ஒரு குழந்தை, ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே வரும்போது, ஒரு மாலையையோ அல்லது தங்கச் சங்கிலியையோ அணிந்து கொண்டு வருவதில்லை.ஆனால், அந்தக் குழந்தை கண்களுக்குத் தென்படாத தனது ‘’ கர்ம’’ சங்கிலியை- அவர்களது முந்தைய ஜன்மங்களில் செய்த அனைத்து கர்மங்களின் விளைவுகளை – அணிந்து கொண்டு வெளி வருகின்றது. ஆனால் அந்த ஆபரணம் கண்களுக்குப் புலப்படாது. இந்த வாழ்க்கையை நன்கு வாழ்வதற்கும்,தீய செயல்களின் விளைவுகளால் ஆன ஒரு சங்கிலியை நமது கழுத்தில் அணிந்து கொண்டு அடுத்த பிறவியில் பிறக்காமல் இருப்பதற்கும், நமது அன்றாட வாழ்க்கையில் நல்ல செயல்களை ஆற்றுவதே ஒரு தலையாய காரணம் என்பதை நாம் புரிந்து கொண்டு இருப்பது அவசியம். எனவே,’’ நல்லதையே செய்,நல்லவனாக இரு, நல்லவற்றையே பார்’’ என்பதைக் கடைப்பிடியுங்கள்.அது மட்டுமே உங்களை இறைவனிடம் இட்டுச் செல்லும்!