azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 12 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 12 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
All creation that you see emanates from the Lord. That the great variety that we see around us is coming only as a result of the change in our own qualities (Gunas) is a truth that is asserted by the sacred texts. You are sometimes very happy, sometimes afraid, and at other times courageous. These changes come about in quick succession and in a casual way. The main reason for all these changes is the change that comes in our own mental attitude. These are manifestations of one’s own qualities. Man has three distinct qualities or gunas - satwa, tamo, and rajo gunas. If these are mixed in a balanced manner, there will be no drastic change in one’s nature. Sunlight is composed of seven different colours. When these colours are mixed in appropriate proportions, there will be no change, and the Sun will shine in its natural colour. On the other hand, if there is an imbalance in the manner in which these colours are mixed, then you will find that some special colours show themselves.( Summer Roses on Blue Mountains, 1976, Ch 9.)
நீங்கள் காணும் சிருஷ்ட்டி அனைத்தும் இறைவனிடமே இருந்து வந்தவையாகும். நம்மைச் சுற்றி நாம் காணும் பலவிதமானவை அனைத்தும், நமது குணாதிசியங்களில் ஏற்படும் மாறுதல்களினால் தான் என்ற உண்மையை, புனித நூல்கள் வலியுறுத்துகின்றன.நீங்கள் சில சமயம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்,சில சமயம் பயப்படுகிறீர்கள்,மற்ற சமயங்களில் தைரியமாக இருக்கிறீர்கள். இந்த மாற்றங்கள் வேகமாக அடுத்தடுத்தும், ஒரு சாதாரண முறையிலும் வருகின்றன.இந்த மாறுதல்கள் அனைத்திற்கும் முக்கிய காரணம், நமது சொந்த மனப்பாங்கில் ஏற்படும் மாறுதல்களே. இவை, ஒருவரது சொந்த குணங்களின் வெளிப்பாடுகளே. மனிதனுக்கு மூன்று விதமான குணங்கள் உள்ளன- ஸத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் . இவை ஒரு சரியான முறையில் கலந்திருந்தால்,ஒருவரது இயல்பில் கடுமையான மாற்றங்கள் இருக்காது. சூரிய ஒளி ஏழு விதமான வண்ணங்களைக் கொண்டது. இந்த வண்ணங்கள் தகுந்த விகிதாசாரத்தில் கலக்கப் படும்போது,எந்த விதமான மாற்றமும் இருக்காது; சூரியன் அவனது இயல்பான வண்ணத்தில் பிரகாசிப்பான். அதே சமயம், இந்த வண்ணங்கள் கலக்கப் படும் முறையில் ஏற்றத்தாழ்வு இருந்தால், சில குறிப்பிட்ட வண்ணங்கள் தங்களைக் காட்டிக் கொள்வதை, நீங்கள் காண்பீர்கள்.