azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 11 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 11 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
God has many names and forms but Divinity is one. Scholars refer to the ‘One Truth’ with many names (Ekam Sath Viprah Bahudha Vadanti). Realising this truth, respect all, love all and give joy to all. Then you become God! When you recognise the fact that Divinity in all is the same, there would be no sense of duality. You may think that it is very difficult, but it is extremely simple. Your inability to recognise this truth is due to the fault of your vision and not the Creator. Correct your faulty vision and perception; see the unity in diversity. In this world, there is a constant strife between good and evil. Many people are jealous of others and subject them to slander. But do not attach any importance to such criticism. Praise and abuse are common to mankind. Several noble people faced similar difficulties and overcame these with fortitude. Live in truth and love, no harm will come to you. (Divine Discourse, Nov 23, 2000.)
இறைவனுக்கு பல நாம, ரூபங்கள் இருந்தாலும் ,தெய்வீகம் ஒன்றே. பண்டிதர்கள் அதையே, பல நாமங்கள் கொண்ட ‘’ ஒரே சத்தியம் ‘’( ஏகம் ஸத், விப்ரா பஹூதா பவந்தி) என்று குறிப்பிடுகிறார்கள்.இந்த உண்மையை உணர்ந்து, அனைவரையும் மதியுங்கள், அனைவரையும் நேசியுங்கள், அனைவருக்கும் சந்தோஷம் அளியுங்கள்.பின்னர் நீங்களே இறைவன் ஆகி விடுவீர்கள் !எப்போது அனைவருள்ளும் உறையும் தெய்வீகம் ஒன்றே என்ற உண்மையை நீங்கள் அறிந்து கொள்கிறீர்களோ, த்வைத பாவம் இருக்காது. இது மிகவும் கடினமானது என்று நீங்கள் எண்ணலாம், ஆனால், இது மிகவும் சுலபமானதே. இந்த உண்மையை, உங்களால் புரிந்து கொள்ள முடியாமைக்குக் காரணம், உங்களது திருஷ்ட்டியின் கோளாறே அன்றி , இந்த சிருஷ்டியின் கர்த்தாவான இறைவன் அல்ல. தவறான உங்கள் பார்வையையும், மனப்பாங்கையும் திருத்திக் கொள்ளுங்கள் ; வேற்றுமையில் உள்ள ஒற்றுமையைக் காணுங்கள். இந்த உலகில், நல்லவைக்கும், கெட்டவைக்கும் இடையில் இடையறாத போராட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பலர் , பிறர் மீது பொறாமை கொண்டு, அவர்கள் மீது பழி சுமத்துகிறார்கள்.ஆனால், இப்படிப் பட்ட விமர்சனத்திற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காதீர்கள். புகழ்ச்சியும், இகழ்ச்சியும், மனிதகுலத்திற்குப் பொதுவானதே. பல சீரிய ஆன்றோர்கள் இதைப் போன்ற இன்னல்களை எதிர்கொண்டு, அவற்றை மனோபலத்துடன் வென்றிருக்கிறார்கள். சத்தியத்திலும், ப்ரேமையிலும் வாழுங்கள், உங்களுக்கு ஒரு தீங்கும் வராது.