azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
You cannot attain sukham through sukham (that is, happiness through comforts). The joy of release can be won only through travails and trials. Through intense pain a woman achieves the bliss of motherhood. Through toil, the coveted grain is earned by the farmer from the field. Through long days and nights of steady study, a student passes in the examination and earns a coveted degree. Deprive yourselves of luxury and even comfort; detach yourselves from that which you hold dear and near out of sheer ignorance of what is most dear and near to yourself; pine, struggle, strive ceaselessly - and then you are blessed with the inexpressible Bliss of merger with the Universal, of Sakshathkara. It is grief that makes joy worthwhile and a precious possession; it is the pitch-dark night that prompts the seeker of light; it is death, that lends zest to life. (Divine Discourse, March 16, 1966)
சுகத்திலிருந்து சுகத்தை, நீங்கள் பெற முடியாது ( அதாவது, சந்தோஷத்தைச் சௌகரியங்களின் மூலம் பெற முடியாது). விடுதலை தரும் சந்தோஷத்தை, கஷ்டங்கள் மற்றும் கடின உழைப்பால் தான் வெல்ல முடியும்.தாங்கமுடியாத வலியின் மூலம் தான் ஒரு பெண், தாய்மையின் ஆனந்தத்தைப் பெறுகிறாள். உழைப்பின் மூலமே, ஒரு விவசாயி நிலத்திலிருந்து விரும்பிய தானியத்தை ஈட்டுகிறார். நீண்ட நாட்கள் மற்றும் இரவுகளில் தொடர்ந்து படிப்பதன் மூலமே, ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெற்று, தேடிய ஒரு பட்டத்தைப் பெறுகிறார். சுகங்கள் ,ஏன் சௌகரியங்களைக் கூட உங்களுக்கே இல்லாமல் செய்து கொள்ளுங்கள்; அருகிலும், நெருக்கமாகவும் எது இருக்க வேண்டும் என்பதை அறியாது, எதை நீங்கள் அருகிலும், நெருக்கமாகவும் வைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அவற்றிலிருந்து உங்களையே விலக்கிக் கொள்ளுங்கள். ஏங்குங்கள்,போராடுங்கள், இடையறாது உழையுங்கள் – பின்னர் நீங்கள் ஆத்ம சாக்ஷாத்காரத்தின்,விவரிக்க முடியாத பேரானந்தத்தைப் பெறுவீர்கள்.சோகமே, சந்தோஷத்தை மதிப்புள்ளதாகவும், ஒரு விலைமதிக்க முடியாத சொத்தாகவும் ஆக்குகிறது; இருண்ட இருளே, சாதகரை, ஒளியை நாடச் செய்கிறது; மரணமே வாழ்க்கைக்கு உத்வேகம் ஊட்டுகிறது.