azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 06 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 06 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
A divine vision of Vishwavirat (Cosmic Form) has been described as one consisting of thousands of heads, legs, and hands. Wherefrom has this Vishwavirat vision come? It is simply the magnified version of what is within ourselves. When I open My eyes, I see so many thousands of heads; but when the eyes are closed, I do not see even one head. When the eyes are open, I not only see these thousands of heads, but I also see this wall, this window and everything around me. If one goes outside and sees with open eyes, one sees the mountains, the sky, the rivers and the distant land; but at that instant, if one closes one’s eyes, why is it that one does not see even a small ant? If the eyes are open, we see the entire creation; and if the eyes are closed, we do not see anything of the creation. Thus we conclude that this entire creation has come from our own vision. Just as with external vision we are able to see the creation, with the help of internal vision, we can see the inner self. (Summer Roses on Blue Mountains, 1976, Ch 8)
இறைவனது விஸ்வவிராட ( பிரபஞ்சமனைத்தும் பரவியுள்ள) ஸ்வரூபம் என்பது ஆயிரக்கணக்கிலான தலைகள், கால்கள் மற்றும் கரங்களைக் கொண்டதாக விவரிக்கப் படுகிறது. இந்த விஸ்வவிராட ஸ்வரூபம் எங்கிருந்து வந்தது? இது, நமக்குள் உள்ள எதுவோ, அதன் வடிவம் தான் பலமடங்கு பெரிதாக்கப் பட்டதாகத் தெரிகிறது. நான் கண்களைத் திறக்கும் போது ஆயிரக்கணக்கான தலைகளைக் காண்கிறேன்; ஆனால் கண்கள் மூடியிருக்கும் போது ஒரு தலை கூட எனக்குத் தெரிவதில்லை. கண்கள் திறந்திருக்கும் போது,நான் ஆயிரக் கணக்கான தலைகளை மட்டும் காண்பதில்லை; இந்தச் சுவர்,இந்த ஜன்னல் மற்றும் என்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் காண்கிறேன்.ஒருவர் வெளியில் சென்று , கண்களைத் திறந்து பார்த்தால்,அவர் மலைகள், வானம், நதிகள் மற்றும் தொலைவில் இருக்கும் நிலங்கள் என்ற அனைத்தையும் காண்கிறார் ; ஆனால் அந்தத் தருணத்தில் ஒருவர் தனது கண்களை மூடி விட்டால், ஏன் ஒரு சிறு எறும்பைக் கூட அவரால் காண முடிவதில்லை? கண்கள் திறந்திருந்தால், நாம் சிருஷ்டி அனைத்தையும் காண்கிறோம்; கண்கள் மூடி இருந்தால் சிருஷ்டியின் எதையும் நம்மால் காண முடிவதில்லை. எனவே, இந்த சிருஷ்டி அனைத்தும் , நமது சொந்த திருஷ்ட்டியிலிருந்தே வந்துள்ளது என நாம் முடிவு செய்கிறோம். எவ்வாறு வெளிப்புறத்திலான திருஷ்டியால், நாம் சிருஷ்டி அனைத்தையும் காண முடிகிறதோ, அவ்வாறே, நமது உள் திருஷ்டியால், அந்தராத்மாவைக் காண முடியும்.