azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 03 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 03 Aug 2016 (As it appears in 'Prasanthi Nilayam')
You are afflicted with the disease which the Gita can cure, the disease of delusion (moha), which warps your sense of values, fogs your vision and distorts your outlook. But, to benefit from the medicines, you must have the sorrow (vishada) which Arjuna had, the dedication he offered, the detachment he developed and the concentration (ekagrata) he evinced. He was ready to go begging for his livelihood rather than enthrone himself as king after the killing of his kinsmen, teachers and elders. Have that keen yearning; then, the Gita can destroy attachment (moha) and liberate you. Discover for yourself your stage of spiritual development, to which class in the school you fit in. Then determine to proceed from that class to the next higher one. Strive your best and you will win the Grace of God. Do not bargain or despair. One step at a time is enough, provided it is towards the goal, not away from it. [Divine Discourse Feb 19, 1966]
ஸ்ரீமத் பகவத் கீதை, உங்களைப் பீடித்திருக்கும் மோஹம் எனும் நோயை குணப்படுத்த முடியும்; இந்த நோய் உங்களது மனிதப் பண்புகளின் உணர்வுகளைத் திரித்து, உங்களது திருஷ்ட்டியை மறைத்து, உங்களது கண்ணோட்டத்தைச் சிதைத்து விடுகிறது. ஆனால், இந்த மருந்திலிருந்து பயனடைய, உங்களுக்கு அர்ஜூனனுக்கு இருந்த, சோகம் ( விஷாத), அவனது அர்ப்பணிப்பு உணர்வு, அவன் வளர்த்துக் கொண்ட பற்றின்மை மற்றும் அவன் காட்டிய ஒரு முக முனைப்பு ( ஏகாக்ரதா ) ஆகியவை இருக்க வேண்டும். தனது உற்றார் உறவினர், குருமார்கள் மற்றும் பெரியோர்களை வதம் செய்து விட்டு, மன்னனாக முடி சூடுவதை விட, தனது வாழ்விற்காக பிச்சை எடுக்கக் கூட அவன் தயாராக இருந்தான். அப்படிப் பட்ட தீவிரமான ஏக்கத்தைக் கொண்டிருங்கள்; பின்னர்,ஸ்ரீமத் பகவத் கீதை உங்களது மோஹத்தை அழித்து, உங்களுக்கு மோக்ஷத்தை அளிக்க முடியும். ஆன்மீக முன்னேற்றத்தின் எந்த நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள், அதன் பள்ளியின் எந்த வகுப்பிற்கு நீங்கள் ஏற்றவர்கள் என்பதைக் கண்டு பிடியுங்கள்.பின்னர் அந்த வகுப்பிலிருந்து அடுத்த மேல் வகுப்பிற்குச் செல்வதற்கு உறுதி எடுத்திக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த அளவு முயலுங்கள்’ இறை அருளைப் பெறுவீர்கள். பேரம் செய்யவோ, மனம் தளரவோ செய்யாதீர்கள். குறிக்கோளை நோக்கி, அதிலிருந்து விலகாது இருப்பீர்களானால் ,அந்தப் பாதையில், ஒரு நேரத்தில் ஒரு படி எடுத்து வைப்பதே போதுமானதாகும்.